சுடுகாட்டில் சடலம் மீது ஏறி உட்கார்ந்த அகோரி மணிகண்டன்.. திடீர்னு வந்த சத்தம்.. நடுங்கி போன திருச்சி
இறந்தவர் சடலம் மீது அமர்ந்து அகோரிகள் பூஜை செய்தனர்
திருச்சி: சுடுகாட்டில் சடலத்தின் மீது உட்கார்ந்து உட்கார்ந்து அகோரிகள் செய்த பூஜையால் திருச்சியே வெலவெலத்து போயுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் ராஜகோபால் - மேரி.. காதலித்து திருமணம் செய்தவர்கள்.. இவர்களின் மகன் மணிகண்டன்... 40 வயதாகிறது.. மணிகண்டன் சின்ன வயசிலேயே காசிக்கு போய் அகோரியாக மாறிவிட்டார்.
அதனால் எப்பவுமே அவர் உடம்பு பூராவும் திருநீறுதான் பூசியிருப்பார்... திடீர் திடீரென்று நடுராத்திரி உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டு பூஜை செய்வார். அப்படியே எழுந்து சுடுகாட்டுக்கு போய்விடுவார்.

அகோரிகள்
அங்கே எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை பிட்டு சாப்பிடுவார். இவர் மட்டுமல்ல... பெரும்பாலான அகோரிகள் எல்லாருமே இப்படித்தான் செய்வார்கள்... திருச்சி உய்யகொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோர காளி கோயில் ஒன்று உள்ளது. இதை மணிகண்டன்தான் கவனித்து வருகிறார். அமாவாசை, பவுர்ணமி நேரங்களில் மணிகண்டன் பூஜைகளை நிறைய நடத்துவார் மணிகண்டன்.

பரபரப்பு
இவரது அம்மா 2 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. அப்போதுகூட அம்மாவின் சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த மணிகண்டனின் சிஷ்யன்தான் வெங்கடேஷ் என்பவர்.. இவரும் அகோரிதான்.. திருச்சி மாவட்டம், மணிகண்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்... நேற்று முன் தினம் கேரளா மாநிலம் பாலக்காட்டில் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

விசித்திர ஒலி
அவரது உடல் மணிகண்டத்திற்கு உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.. பிறகு இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் அங்கு வந்தார் மணிகண்டன்.. உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு சிஷ்யர்களுடன் சுடுகாட்டுக்கு வரும்போதே விசித்திர ஒலியை எழுப்பி வந்தனர்.. வெங்கடேஷ் ஏற்கனவே அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்ததால், அவரது சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார் மணிகண்டன்.

சுடுகாடு
உடனே மந்திரங்கள் ஜெயித்து ஆன்ம சாந்தி பூஜை செய்தார்... அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர்... குடும்பத்தினரின் அனுமதியோடு இந்த ஆன்ம சாந்தி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட வினோத பூஜையெல்லாம் காசியில் மட்டுமே காணமுடியும்.. இதை மணிகண்டன் திருச்சி சுடுகாட்டில் அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications