லால்குடியில் ஷாக்.. பூனையை கண்டாலே ஆகலை.. விஷம் வைத்து 10 பூனைகளை சாகடித்த அமமுக பிரமுகர்!
பூனைகளை விஷம் வைத்து கொன்றுள்ளார் அமமுக பிரமுகர்
திருச்சி: பூனைகள் மேல் கோபம்.. பார்த்தாலே கடுப்பானது.. அதனால் 10 பூனைகளை விஷம் வைத்தே கொன்றுவிட்டார் அமமுக பிரமுகர் ஒருவர்.. இது தொடர்பாக அவரை லால்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
லால்குடி அருகிலுள்ள திருமங்கலம் சாலை பகுதியை சோ்ந்தவா் ஜெயந்த் முரளி.. 49 வயதாகிறது.. புர் உத்தமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ளார்.. மயக்கவியல் மருத்துவரும்கூட!

இவருக்கு பூனைகள் என்றால் உயிர்.. அதனால் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளை வளா்த்து வந்தார்.. இவரது பக்கத்து வீட்டுக்காரர் பாலசுப்பிரமணியம்.. 54 வயதாகிறது.. லால்குடி நகர அமமுக செயலாளர் ஆவார்.
இந்த பூனைகள் வளர்ப்பது தொடர்பாக பாலசுப்பிரமணியனுக்கும், டாக்டருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.. பூனைகள் வளர்ப்பது பாலசுப்பிரமணியத்துக்கு பிடிக்கவில்லை.. அதனால் டாக்டருடன் பலமுறை வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது விஷம் வைத்து பூனைகளை கொன்று விடுவதாக பாலசுப்பிரமணியன் மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் டாக்டர் வீட்டிலிருந்த 10 பூனைகள் அப்பகுதியில் இறந்து கிடந்தன... மீதமுள்ள 10 பூனைகளையும் காணவில்லை.... இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்த் முரளி லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்... இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்..
ஆனால் சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த சம்பவம் லால்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications