ஒலிம்பிக் களம் கடுமையாக இருக்கு.. இந்திய வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவை.. தமிழக வீராங்கனைகள்
திருச்சி: ஒலிம்பிக் களம் கடுமையாக இருக்கிறது, இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை என டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய திருச்சி வீராங்கனைகள் பேட்டியளித்துள்ளனர்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டதில் கலந்து கொண்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த திருச்சியை சேர்ந்த சுபா மற்றும் தனலட்சுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுபா : ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற கடுமையான பயிற்சி மேற்கொண்டாலும் கூட ஒலிம்பிக் களம் கடுமையாக இருக்கிறது.

கூடுதல் பயிற்சி
இந்தியா வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை,இன்னும் கூடுதலாக பயிற்சி பெற்று அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வோம். இந்திய வீரர்களுக்கு துவக்க நிலையிலிருந்தே அடிப்படை பயிற்சி முதல் அனைத்து பயிற்சிகளையும் ஊக்கமும் வழங்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள்
அப்படி வழங்கும் பட்சத்தில் அது போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடுமையான பயிற்சி எடுத்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை, இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை எங்களின் தோல்வி உணர்த்தி உள்ளது.

தனிப்பட்ட காரணம் இல்லை
அடுத்து பேசிய தனலட்சுமி, அரசு வேலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை களமிறக்காததற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. கடந்த காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்திற்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது வாய்ப்புகள் வருகிறது.
Recommended Video

11 விளையாட்டு வீரர்கள்
வரும் காலங்களில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறோம். எங்களுக்கு தெரிந்து எந்தவித சாதிய பாகுபாடு இல்லை என்றார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்திலிருந்து 11 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications