முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சி வரகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையை தரிசனம்செய்தார்,
இதனை தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மற்றும் திருவரம்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் திருச்சி வரகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார், அங்கு மேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மாற்று வாகனத்தை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் மாற்று வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications