திருச்சி அருகே காவிரி கரையோரம் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. பதற்றம்
திருச்சி: திருச்சி அருகே முசிறி பகுதியின் காவிரி கரையோரம் உள்ள நர்சரி தோப்பில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் கௌதம் (19). இவர் தொட்டியம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

இந்நிலையில் கௌதம் முசிறி பகுதியின் காவிரி கரையோரம் உள்ள நர்சரி தோப்பு என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், வாலிபரின் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததால் அவரை அடித்து கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து
வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முசிறியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications