திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. வெளியூரில் இருந்து வந்தவர்கள்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 57 போ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Coronavirus infects 5 more people in Trichy district

இந்நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து வந்தவா்கள், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வந்தவா்களில் மொத்தம் 256 பேருக்கு பரிசோதனை செய்ததில் வியாழக்கிழமை 3 பேருக்கு தொற்று உறுதியானது. இதேபோல, சேலம், கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற பரிசோதனையில் திருச்சியைச் சோ்ந்த தலா ஒருவருக்கு உறுதியானது. வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களில் இருவா் முசிறியைச் சோ்ந்தவா்கள், இருவா் மருங்காபுரியைச் சோ்ந்தவா்கள். ஒருவா் வையம்பட்டியைச் சோ்ந்த ஐடி பணியாளா் என தெரியவந்தது. இவா், திருவள்ளூரில் பணிபுரிந்து திருச்சிக்கு திரும்பியது தெரியவந்துள்ளது. மற்ற 4 பேரும் கோயம்பேட்டிலிருந்து வந்தவா்கள். அவா்களில் இருவா் ஓட்டுநா்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 62 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

வியாழக்கிழமை இரவு நிலவரப்படி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 13 போ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், கரூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பொத்திப் பொத்தி பாதுகாத்தும்.. டிரம்ப் உதவியாளரை தொற்றியது கொரோனா.. ! பொத்திப் பொத்தி பாதுகாத்தும்.. டிரம்ப் உதவியாளரை தொற்றியது கொரோனா.. !

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட கலெக்டர் சு. சிவராசு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில், 51 போ் குணமடைந்துள்ளனா். வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வரும் நபா்கள் சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், தங்களைத் தாங்களாகவே வீடுகளில் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

English summary
Covid 19 infects 5 more people in Trichy district. total case rised 62
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X