கால்வாயில் மோடி படத்தை தூக்கி எறிந்த திமுகவினர்?.. கொந்தளிக்கும் பாஜக.. மோதலில் திணறும் திருச்சி
கால்வாயில் பிரதமர் மோடி படத்தை வீசியெறிந்ததாக புகார் கிளம்பி உள்ளது
திருச்சி: கால்வாயில் பிரதமர் மோடி படத்தை திமுகவினர் வீசியெறிந்ததாக புகார் கிளம்பி உள்ள நிலையில், திருச்சி பாஜக கொந்தளித்து காணப்படுகிறது.. திமுகவினரை கைது செய்ய கோரிய நிலையில், பாஜகவினரையே போலீஸ் கைது செய்துள்ள நிலையில், திருச்சியில் பரபரப்பு காணப்பட்டுகிறது.
Recommended Video
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் போட்டோவை பாஜகவினர் மாட்டி வருகிறார்கள்.. ஆனால், எங்கெல்லாம் மாட்டி வருகிறார்களோ, அங்கெல்லாம் சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்து வருகின்றன.
அந்த வகையில் திருச்சியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. நேற்று முதல் இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பரபரத்தும் காணப்படுகிறது.. அது தொடர்பான விவாதங்களும் நடந்து வருகிறது.

என்ன நடந்தது?
திருச்சி பொன்னகரிலுள்ள அமராவதி கூட்டுறவு நியாய விலைக்கடையில், பாஜக மண்டல தலைவர் பரமசிவம் தலைமையில் சில பாஜகவினர் திரண்டு வந்து, பிரதமர் மோடியின் போட்டோவை மாட்டியுள்ளனர்... இதற்கு அங்கிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... இதனிடையே, 55-வது வார்டு திமுக கவுன்சிலர் ராமதாஸ் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்..

ரேஷன் கடை
"முறைப்படி அனுமதி வாங்காமல் மோடி போட்டோவை எப்படி ரேஷன் கடையில மாட்டலாம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. இந்த வாக்குவாதத்தின்போது, திமுக கவுன்சிலர் ராமதாஸ் மீது பாஜகவினர் கை வைக்க போனதாகவும், இதனால் திமுகவினர் கொந்தளித்து கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ரேஷன் கடையில் அனுமதியின்றி மாட்டியிருந்த மோடி போட்டோவை எடுத்து உடைத்து கீழே வீசினர்..

திடீர் மறியல்
மோடி போட்டோவை வைக்கக் கூடாது என்று முழக்கமிட்டு ரேஷன் கடை முன்பேயே மறியலிலும் ஈடுபட்டனர். இதற்கு பிறகு, விரைந்து வந்த போலீசார் ரேஷன் கடையை அரை மணி நேரம் இழுத்து மூடினர்.. இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.. ஆனாலும் விவகாரம் புகைந்து கொண்டே இருக்கிறது.. காரணம், கைகலப்பில் ஈடுபட்டபோது, அவர்களில் சிலர் மோடியின் போட்டோவை உடைத்து சாக்கடை கால்வாயில் வீசிவிட்டார்களாம்..

கால்வாய்
இதுதான் பாஜகவினருக்கு கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணி உள்ளது.. இரு தரப்பிலுமே போலீசில் புகார் தரப்பட்டது.. எது எப்படி இருந்தாலும், பிரதமர் மோடியின் போட்டோவை கால்வாயில் போட்டது யார், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போலீசாரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமரின் போட்டோவை உண்மையிலேயே கால்வாயில் வீசி எறிந்தார்களா? என்றும் திமுக தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு பக்கம், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை இருக்கும் இடம் மாநகராட்சியினுடையது என்கிறார்கள்..

அத்துமீறல்
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த இடத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மீட்டெடுத்து திமுக எம்எல்ஏ நிதியில் இந்த ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.. அந்த ரேஷன் கடையில்தான் அனுமதியின்றி அத்துமீறி பாஜகவினர் நுழைந்து மோடியின் படத்தை மாட்டியிருப்பதாக திமுக தரப்பில் சொல்கிறார்கள்.. அதுவும் "அனுமதி வாங்கிவந்து மாட்டுங்கள் என்றுதான் சொன்னோம், அதற்குள் என்னென்னமோ நடந்துவிட்டது.. ஆனால், அங்கு வந்தவர்கள் யாருமே ரேஷன் கடை இருக்கும் பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை" என்கிறது திமுக தரப்பு.

கொந்தளிப்பு
இது தொடர்பான விசாரணை நடந்து முடிந்தால்தான் உண்மை தன்மை தெரியவரும்.. மற்றொரு பக்கம், ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை திமுக மாநகராட்சி உறுப்பினரை தாக்க முயன்றதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்... ஏற்கனவே, மோடி படத்தை வீசியெறிந்தவர்களை கைது செய்ய பாஜகவினர் கோரியிருந்த நிலையில், பாஜகவினரே தற்போது மீண்டும் கைதாகி உள்ளது, திருச்சி திமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications