Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட.. எழுதாத பேனாவிற்கு சிலை தேவையில்லையாம்.. சொல்வது பிரேமலதா விஜயகாந்த்!

இனி வரும் தேர்தலில் தேமுதிக தனித்து மட்டுமே போட்டியிடுமா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எழுதாத பேனாவுக்கு கடலில் நினைவு சின்னம் அமைக்க வேண்டிய தேவையில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுவரை 13 இடைத்தேர்தல்களில் தேமுதிக தனித்து போட்டியிட்டுள்ளதாக கூறிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதேபோல் அதிமுக தரப்பில் தென்னரசு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று அறிவித்து, பின்னர் டிடிவி தினகரன் பின்வாங்கினார். ஆனால் இடைத்தேர்தல் களத்தில் தேமுதிக தனித்து போட்டியிட்டு வேட்பாளரை அறிவித்துள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தேமுதிக வேட்பாளராக ஆனந்த் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது. மக்கள் மத்தியில் தேமுதிகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 2011ல் தேமுதிக ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் எங்கள் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இனி தனித்துப்போட்டி?

இனி தனித்துப்போட்டி?

தொடர்ந்து தேமுதிக இனி தனித்து மட்டுமே போட்டியா என்ற கேள்விக்கு, இனி வரும் காலத்தையும், சூழலையும் பொறுத்துதான் முடிவு செய்யப்படும். இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று விஜயகாந்த் முடிவு செய்தார். அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம். தேமுதிக சுயமாக வளர்ந்த கட்சி. ஏற்கனவே 13 இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டுள்ளோம். தற்போது எந்தக் கட்சியுடனும் தேமுதிக கூட்டணியில் இல்லை.

தேமுதிகவை இயக்குவது யார்?

தேமுதிகவை இயக்குவது யார்?

பணநாயகம், ஆட்சி பலம் ஆகியவற்றை எதிர்த்து தான் தேமுதிக போட்டியிடுகிறது. மக்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் உழைக்கிறோம். திமுக, அதிமுகவும் பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதனால் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். தேமுதிகவை இயக்குவது விஜயகாந்த் மட்டும் தான். வேறு யாராலும் தேமுதிகவை இயக்க முடியாது. விரைவில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பின், பொதுச்செயலாளர் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பேனா நினைவு சின்னம்

பேனா நினைவு சின்னம்

தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர், பேனா சிலை பற்றிய கேள்விக்கு, கருணாநிதி உயிருடன் இருந்தபோது, விஜயகாந்த் தங்கத்தில் பேனா கொடுத்துள்ளார். அதனால் மீண்டும் பேனாவுக்காக ரூ.81 கோடியில் சிலை வைப்பது அவசியமில்லை. அதுவும் எழுதாத பேனாவுக்கு சிலை தேவையில்லை. அதுவும் கடலில் வைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

திமுக மீது விமர்சனம்

திமுக மீது விமர்சனம்

மக்களின் பணத்தை கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவழிக்கலாம். ஆனால் பேனா சின்னம் அமைக்க பணம் செலவழிப்பது ஏற்புடையதல்ல. அதேபோல் அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. ஈரோடு தேர்தல் பணிகள் மட்டும் செய்வது மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் கெட்டப்பெயரை எடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+