14 வயது மனநலம் குன்றிய சிறுமி.. 7 மாதமாக சீரழித்த திமுக பிரமுகர்.. 4 பேர் கைது.. ஷாக் சம்பவம்
14 வயது சிறுமியை சீரழித்த திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
திருச்சி: 14 வயது மனநலம் குன்றிய சிறுமியை திமுக பிரமுகர் உட்பட 4 பேர் 7 மாதங்களாக தொடர்ந்து நாசம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புலிவலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவள் மனநலம் குன்றியவள். பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். அதனால் படிக்க வைக்க முடியவில்லை. இவர்கள் வேலைக்கு சென்றுவிட்டால் சிறுமியை கவனிப்பது அவளது தாத்தாதான்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருப்பது தாய்க்கு தெரிய வந்ததையடுத்து அவர் அதிர்ச்சி ஆனார்.

கர்ப்பம்
அதனால் பக்கத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து செல்லுமாறு அங்கு சொல்லி உள்ளனர் இதையடுத்து, அங்கு சென்று டாக்டர்களை பார்த்ததில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளது உறுதி செய்யப்பட்டது.

விசாரணை
இந்த விஷயம் உடனடியாக போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல திடுக் தகவல்கள் வெளியானது.

கர்ப்பம்
57 வயது பால்காரன் முத்து, 51 வயது டீக்கடைக்காரர் செல்வராஜ், 45 வயது ராமராஜ் மற்றும் பேரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த திமுகவை சேர்ந்த 49 வயது செல்வராஜ் ஆகிய இந்த 4 பேரும்தான் சிறுமியை சீரழித்துள்ளனர். இது கடந்த 7 மாதமாகவே தொடர்ந்து நடந்துள்ளது. இப்போது அவள் 6 மாத கர்ப்பமாக இருக்கிறாள்.

திமுக
இதில் செல்வராஜ், திமுக ஊராட்சி மன்ற பகுதி பொறுப்பாளர் ஆவார். மேலும் திமுக மாவட்ட விவசாய அணியிலும் உள்ளார். இதையடுத்து, இந்த 4 பேரும் போலீஸ்காவலில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைதவிர வேறு யாரோ 3 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தாத்தா
இந்த 4 பேருமே எப்படி தாத்தாவின் பாதுகாப்பை மீறி சிறுமியை பலாத்காரம் செய்ய முடிந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து 7 மாதங்கள் இது நடந்துள்ளது என்றால், தாத்தாவும் இதில் உடந்தையா, அல்லது அவருக்கே தெரியாமல் இந்த கொடுமை நடந்து வந்ததா தெரியவில்லை. எனினும் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications