மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
திருச்சி: மகளிர் உரிமை தொகையை யாராலும் நிறுத்த முடியாது; அப்படி யாராவது நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் எனவும், திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும்; அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி என திருச்சி திமுக மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட சிறுகனூரில் திமுக மாநில மாநாட்டில் உரையாற்றிய அவர்," ஃபர்ஸ்ட் பால்ல ரன் அடிக்குறது முக்கியம்தான். அதே சமயம் ஃபைனல் ஓவர்களில் அடிச்சி ஆடி கடைசி பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸ் அடித்து வெற்றி பெறுவது கிராண்ட் ஃபினிஷிங்காக இருக்கும்.
அப்படிப்பட்ட வெற்றியை 2026ல் நாம் பெறுவதற்குதான் இந்த மாநாடு. திமுக நடத்திய 12 மாநில மாநாடுகளில் 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடைபெற்றுள்ளது. திருச்சி என்றாலே திமுகவுக்கு திருப்பம், முழக்கம், மகத்தான எழுச்சி, வெற்றி. 1953-ல் கைக்குழந்தையாக இருந்த என்னை இதே திருச்சியில்தான் கலைஞரிடம் காண்பித்தனர்.

2021-ல் சொன்ன 7 இலக்குகளையும் திமுக 5 ஆண்டுகளில் பல திட்டங்களால் நிறைவேற்றி காட்டியுள்ளது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடுதான் என்று மத்திய அரசு கூட சொல்கிறது. உலக பத்திரிகைகள் பாராட்டும் அளவுக்கு நாம் கெத்தாக முன்னேறி உள்ளோம். தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் தடைகளை தகர்த்து தமிழ்நாடு கெத்தாக முன்னேறியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் 1,190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 33 புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் உரிமை தொகையை யாராலும் நிறுத்த முடியாது; அப்படி யாராவது நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும்; அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. திமுக அரசை காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
பீகாரில் நிதிஷ் குமார் முகத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது அவரை அகற்றி விட்டு முதலமைச்சர் பதவியைப் பிடிக்க உள்ளது பாஜக. இதே போல எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுக இருக்கும் வரை அது நடக்காது. தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ளது என்பதை அறிந்தும், அதற்காகக் கூட பட்ஜெட்டில் மாநிலத்திற்கு எந்த திட்டங்களையும் ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இந்த அளவுக்கு திட்டமிட்டு தமிழ்நாட்டை புறக்கணிக்கும் NDA கூட்டணிக்கு எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?
அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான் போடப்பட்டன; ஆனால் திமுக ஆட்சியில் 1190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் ரூ.4.13 லட்சம் கோடி, திமுக ஆட்சியில் ரூ.12.54 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 13,500- க்கும் மேற்பட்ட START UP நிறுவனங்களை தொடங்கி இருக்கிறோம்." என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications