மீண்டும் திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. டிரோன்கள் பறக்க தடை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக திருச்சிக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜனவரி 19ஆம் தேதி) கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை சென்னையில் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படுகிறது.

அண்மையில் டெல்லி சென்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19ஆம் தேதி நாளை 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார். ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
அடுத்த நாள், ஜனவரி 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி. பின்னர், திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதையடுத்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி செல்கிறார். பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்ல உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 20ஆம் தேதி வரை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி நாட்டின் பிரதமர் மோடி நேரில் வந்து பாரதிதாசன் பல்கலைகழக விழாவில் கலந்து கொண்டார். இதுமட்டுமல்லாமல் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து திருச்சியை சுற்றி இருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். இந்நிலையில், மீண்டும் திருச்சிக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications