திருச்சி திருவெறும்பூரில் தடையை மீறி மாட்டிறைச்சி விற்பனை செய்த 5 பேர் மீது போலீஸ் வழக்கு
திருச்சி: திருவெறும்பூர் அருகே கலெக்டர் உத்தரவை மீறி மாட்டிறைச்சி விற்பனை செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்கள்.
உலகெங்கும் பரவி பல உயிர்களை பலி கொண்டு வரும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிமனித சமூக விலகளை கடை பிடிக்கும் விதமாக திருச்சி மாவட்ட கலெக்டர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதிகளில் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானாமிர்தம், வருவாய் ஆய்வாளர் வைதேகி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பனையக் குறிச்சி சர்க்கார்பாளையத்தை சேர்ந்த புஷ்பராஜ், ஆரோக்கியராஜ், பால் காட்டர், பீட்டர் காட்டர், ஜான் ஆகிய 5 பேரும் மாட்டு இறைச்சி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த ஐந்து பேரின் மீது வருவாய்த்துறையினர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications