சின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன்
திருச்சி: திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார். ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக திருச்சி வந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்கள் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தவறான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்தார். திமுக மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் இதனை இனியும் தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை எனவும் கூறினார்.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒரு பிரச்சனையே கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தாம் முழு மனதுடன் வரவேற்பதாகவும் கட்சி நலன் மட்டுமல்லாமல் தமிழக நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இதுவென்றும் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் பொதுவாகவே பிறக் கட்சிகள் மீது விமர்சனம் செய்வதை தவிர்க்கும் நாகரீகம் கொண்ட வாசன், ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றது முதல் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. வாலண்டியராக வந்து திமுகவை வசைபாடியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications