நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
திருச்சி: நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான்.. நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு, இந்த போக்கு மாற வேண்டும்.. கோர்ட்டுகள், நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
திருச்சி கலையரங்கத்தில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் பொன்விழா கருத்தரங்கம் ஜனவரி 4ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசும் போது, நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என நம் நாட்டில் கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இந்த போக்கு மாற வேண்டும். நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும்.
நீதிபதிகளுக்கு பிரத்தியேக போலீஸ் பாதுகாப்பு என்பது தேவையில்லை. இதன் மூலம் மனித ஆற்றல் விரயம் ஆகிறது. நீதிபதியின் செயல்பாட்டை அவர் அளித்த வழக்குகளின் தீர்ப்பின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட இயலாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்கிற்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.
சில குற்ற வழக்குகளை விசாரிக்க மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது. சில நீதிபதிகள் இரவு வரை கூட நீதிமன்றத்தில் வேலை செய்கின்றனர். நீதிபதிகளுக்கு எதிராக எந்த சோதனையும் நடைபெறாது என்ற தைரியத்தில் ஏற்கனவே இருந்த 2 நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதாக தகவல்கள் இருக்கின்றன. நீதிபதிகள் தங்கள் பணி நேரத்தில் முழுமையாக கடமை ஆற்ற வேண்டும்" இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தரங்கில் பேசினார்.
முன்பு ஒரு முறை விழாவில் ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசும் போது, நம் வாழ்க்கையில் கவனச் சிதறலுக்கு வழிவகுக்கும் விஷயங்களை தியாகம் செய்தாலே போதும். குடி உள்ளிட்ட கெட்ட விஷயங்களை தியாகம் செய்தால் நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும். தியாகிகளின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications