தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்ததே லேட்.. அதனால்தான் சிக்கல்.. முதல்வர் தலையிட வேண்டும்.. ஜோதிமணி
தேசிய பேரிடர் மீட்பு குழு வந்ததே தாமதம் என்று ஜோதிமணி குற்றஞ்சாட்டி உள்ளார்
Recommended Video
மணப்பாறை: "தேசிய பேரிடர் மீட்புக்குழு தாமதமாக வந்தது.. முதலில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத்தான் குழந்தையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. தொடர்ந்து பாறையை உடைக்க முடியாவிட்டால் மாற்று வழி குறித்து ஆராய வேண்டும்.. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்" என்று எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.
குழந்தை தவறி விழுந்த நாளில் இருந்து, சம்பவ இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார் உள்ளிட்ளோர் முகாமிட்டுள்ளனர். இதுபோலவே கரூர் எம்பி ஜோதிமணியும் நடுக்காட்டுப்பட்டியிலேயே உள்ளார்.
மீட்பு பணிகளை குறித்து கேட்டறிந்து கொண்டே இருக்கிறார். சுஜித்தின் வீட்டுக்கு சென்ற ஜோதிமணி, மயங்கிய நிலையில் தவித்து கொண்டிருந்த அவரது அம்மாவை சந்தித்து ஆறுதல் சொன்னார். "என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தந்துடுங்க" என்று சொன்னதற்கு, "சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான்" என்று அந்த தாய்க்கு நம்பிக்கை தந்தார்.

மீட்பு பணி
பிறகு, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பிரத்யேக கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் செய்தியாளர்களிடம் ஜோதிமணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்தாலும், சுஜித்தை இன்னும் வெளியே கொண்டு வர முடியவில்லை.
|
தாமதம்
இதுகுறித்து பேசிய ஜோதிமணி தேசிய பேரிடர் குழு வந்ததே லேட் என்றும், அதனால்தான் சுஜித்தை மீட்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் அவர் சொன்னதாவது: "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நல்ல நோக்கத்துடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில தாமதங்கள் காரணமாக குழந்தையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

துளையிட தாமதம்
தமிழகமெங்கும் உள்ள மக்கள் அனைவரும் சுஜித் நலமுடன் மீண்டுவர பிரார்த்தனைகள் நடக்கின்றன.. ஆயிரக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திற்கு வருகின்ற ஒரு நெகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. மீட்பு நடவடிக்கையை பொறுத்தவரையில் பெரிய முன்னேற்றம் இன்றி நடைபெற்று வருகிறது. பாறையானது கடினமாக இருப்பதால் துளையிட தாமதம் ஆகிறது.

மாற்று வழி
ஒருவேளை பாறையை உடைக்க முடியாவிட்டால் மாற்று வழி குறித்து ஆராய வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாருமே நல்ல நோக்கத்துடனே பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், தேசிய பேரிடர் மீட்புக்குழு தாமதமாக வந்தது. முதலில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே தொடர்ந்து குழந்தையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர்
இப்போது இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அதனால், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications