ஊரடங்கிலும் அடங்காத பிடிவாதம்.. வினோத் தான் வேணுமாம்.. ஓடிபோய் மணந்த ஜீவிதா.. ஆச்சரியத்தில் திருச்சி
ஊரடங்கில் காதலனை கைப்பிடித்தார் திருச்சி இளம்பெண்
திருச்சி: ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியேறி உயிருக்குயிராக காதலித்த காதலனையே கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார் கல்லூரி மாணவி.. இந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது!!!
திருச்சி சிந்தாமணி காந்திநகரை சேர்ந்தவர் வினோத்.. 25 வயதாகிறது.. ஐடிஐ முடித்துள்ளார்.. அரியமங்கலத்தில் பஸ்-லாரிகளுக்கு பாடி கட்டும் பட்டறை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவர் ஜீவிதா என்ற பெண்ணை காதலித்தார்.. இவர் தனியார் காலேஜில் பிஎஸ்சி 3-ம் வருடம் படித்து வருகிறார்.. ஜீவிதாவுக்கு இப்போது வயது 20 ஆகிறது. இருவரும் உயிருக்குயிராக விரும்பினர்.

கல்வி நிலையம்
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.. அதேபோல தொழில் நிறுவனங்களும் எதுவும் செயல்படவில்லை.. அதனால் வினோத் வேலை செய்த பட்டறையும் மூடப்பட்டது. காலேஜ் அருகில் உள்ள பூசாரி தெருவில் ஜீவிதாவின் தோழி வீடு உள்ளது... ஒரு வருடத்துக்கு முன்பு தோழி வீட்டுக்கு ஜீவிதா வந்து சென்றுள்ளார்.

காதல்
அப்போதுதான் தோழி மூலம் வினோத் அறிமுகமானார்... நட்பு காதலானது.. இவர்களின் காதல் சமாச்சாரம் வீட்டுக்கு தெரியவந்தது.. கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. காரணம் இருவரும் வேறு வேறு சாதி என்பதால்.. எனவே மகளுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பித்து, அதன்படியே திருமணமும் செய்து வைக்க முடிவானது.. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கவும் அது முடிந்தபிறகு கல்யாணத்தை வைத்திருந்தனர்!!

கல்யாணம்
இதனிடையே ஊரடங்கு சமயத்தில், அடிக்கடி தோழி வீட்டுக்கு ஜீவிதா வந்து சென்றுள்ளார். வினோத்தையும் சந்தித்து பேசி நடக்க உள்ள கல்யாணத்தை பற்றி பேசியுள்ளார்.. ஊரடங்கு முடிந்தபிறகு திருமணம் என்பதில் பெற்றோர் திட்டவட்டமாக இருக்கவும், இப்போதே கல்யாணம் செய்துவிடுவது என்பதில் ஜீவிதா பிடிவாமோக இருந்தார். அதனால் வீட்டை விட்டு வெளியேறி கீழ சிந்தாமணியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் கல்யாணம் செய்து கொண்டார்.

ஊரடங்கு
இந்த கல்யாணத்துக்கு வினோத் வீட்டில் இருந்து மட்டும் உறவினர்கள் வந்திருந்தனர். இதையடுத்து மகள் ஓடிப்போன சமாச்சாரம் தெரிந்ததும் பதறி போன ஜீவிதாவின் பெற்றோர் கோட்டை போலீசில் தந்தனர்.. போலீசாரும் இரு தரப்பு பெற்றோரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.. பெற்றோர்களை சமாதானப்படுத்தினர்.

பிடிவாதம்
அப்போது ஜீவிதா, வாழந்தால் வினோத்தான், பெற்றோருடன் போக மாட்டேன் என்று பிடிவாதம் காட்டினார்.. இதையடுத்து, போலீசார், ஜீவிதா விருப்பப்படியே காதலனுடன் அனுப்பி வைத்தனர். ஊரடங்கு சமயத்திலும் இளம்பெண் பிடிவாதமாக இருந்து, வீட்டை எதிர்த்து காதலனை கல்யாணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications