திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா.. ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நவம்பர் 2022க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் நவம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023இல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறத் தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வில் நிறைஞர், பட்டயம், பட்ட சான்றிதழ் படிப்பு படித்த மாணவர்களுக்கு இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையம் வரும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications