முதல்ல அவர் சுய பரிசோதனை செய்துக்கட்டும்.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு தம்பிதுரை பொளேர் பதில்!
பொன்.ராதாகிருஷ்ணனை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி: என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள சொல்லி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார், ஆனால் முதலில் அவர் சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும் என்று மு.தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கருடன் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எதிரான கருத்து
பின்னர் செய்தியாளர்களுக்கு தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியபோது: "மத்திய அரசிடமிருந்து தமிழக அரசிற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும். அதை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும் அதை மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும். எல்லா திட்டங்களும் மத்திய அரசு திட்டங்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் நான் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுகிறேன்.

அமைச்சர்கள் எனக்கு அரண்
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. அதற்காகத்தான் தொகுதி பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. தற்போது நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். தமிழக அமைச்சர்கள் எனக்கு அரணாக உள்ளனர். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நிதி ஒதுக்க வேண்டும்
மத்திய அரசின் திட்டமான கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 கோடியில் இருந்து தான் நான் கிராமங்களை தத்து எடுப்பதற்கு நிதி ஒதுக்கி வருகிறேன். கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறினார்.

Click it and Unblock the Notifications