அமைச்சர் கே.என்.நேரு 70வது பிறந்தநாள்! ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. ஆர்கெஸ்ட்ரா வைத்து அமர்களம்!
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் 70வது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அமர்களமாக கொண்டாடி வருகின்றனர்.
கட்சியினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், என பலதரப்பட்டோரும் வாழ்த்துச் சொல்வதற்காக காலையிலேயே திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேரு இல்லத்தில் குவிந்துவிட்டனர்.
ஆதரவாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்த அமைச்சர் நேரு, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் நேரு
அமைச்சர் கே.என்.நேரு இன்று 70வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் திருச்சியில் களைக்கட்டியுள்ளன. கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையில் மீட்பு பணிகளில் இருந்த அமைச்சர் நேரு, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதற்காக தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் எனக் கூறியிருந்தார். இதனால் கடந்தாண்டு நேருவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.

ஆர்கெஸ்ட்ரா கச்சேரி
ஆனால் இந்தாண்டு 70வது பிறந்தநாள் என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடி தீர்க்கத் திட்டமிட்ட அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், சர்க்கரை நோய் முகாம், அன்னதானம், இலவச கண் பரிசோதனை முகாம், ஆர்கெஸ்ட்ரா கச்சேரி என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் அமைச்சர் நேருவால் பலன் அடைந்தவர்கள், இனி வரும் காலத்தில் பலன் அடைய வேண்டும் என காய் நகர்த்துபவர்கள் இதற்கான செலவுகளை கவனித்துக் கொள்கின்றனர்.

தில்லை நகர் இல்லம்
கட்சியினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், என பலதரப்பட்டோரும் வாழ்த்துச் சொல்வதற்காக காலையிலேயே திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேரு இல்லத்தில் குவிந்துவிட்டனர். எல்லோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடையே ஐப்பசியில் பிறந்த நாயகனே என நேருவை புகழ்ந்தும் கார்த்திகையில் பிறந்த காவியமே என நேருவின் மகன் அருணை புகழ்ந்து ஆதரவாளர்கள் பதாகைகள் வைத்து கவனம் ஈர்த்துள்ளனர்.

முதல்வரிடம் வாழ்த்து
இன்று திருச்சியில் தொண்டர்கள் தன்னை சந்திக்க வருவார்கள் என்பதால் நேற்றே சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றுக்கொண்டார் அமைச்சர் நேரு.
-
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications