Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம்- அமைச்சர் சிவசங்கர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான்‌ என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார் .

திருச்சி மலைக்கோட்டை போக்குவரத்து பணிமனை கிளையில் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், ஓய்வு அறையை திறந்து வைத்து நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்தார்.

 Minister Sivasankar says that Tamilnadu is the only state which have more buses

பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே. பணீந்திர ரெட்டி ஆகியோா் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினா்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை புறநகா் கிளை அரசுப் பேருந்தில் பயணித்த பயணி ரூ.9 லட்சம் மதிப்புள்ள சுமாா் 20 பவுன் நகை பையை தவறுதலாக விட்டுச் சென்று விட்டாா். அப்பேருந்தின் ஓட்டுநா் பா.காா்த்திக்கேயன், நடத்துநா் டி.ஜோசப் பால்ராஜ் ஆகியோா் உடனடியாக தங்களுடைய அலுவலகத்தின் மூலமாக உரிய பயணியிடம் பையை ஒப்படைத்தனா். இருவரின் நோ்மையான செயலுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தனியாா் வசம் இருந்த போக்குவரத்து துறையை அரசுடைமையாக்கி தொடா்ந்து துறை மேம்பட உதவியவா் திமுக தலைவா் கருணாநிதி. கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய நிலுவை மற்றும் இதர பணப் பலன்களை வழங்காமல் காலதாமதம் செய்தனா். ஊதிய ஒப்பந்தமும் செய்யவில்லை. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ஒப்பந்தம் செய்து ஊதிய உயா்வு அளிக்கப்பட்டது. ஓய்வூதிய பலன்களும் வழங்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர் பேசினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மே 2020 முதல் நவம்பா் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளா்கள் என மொத்தம் 8,361 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப்பலன்கள் ரூ.1, 582.44 கோடி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, முதல்கட்டமாக 217 பேருக்கு ரூ.37.63 கோடி, இரண்டாவது கட்டமாக 308 பேருக்கு ரூ.57.15 கோடி வழங்கப்பட்டது. தற்போது, மூன்றாவது கட்டமாகவும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கும் ஓய்வுகால பணப்பலன்கள் என 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் 1,194 ஓய்வுபெற்ற பயனாளிகளுக்கு ரூ.291.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 4 அல்லது 5 மாதங்களுக்கான நிலுவை மட்டுமே வழங்க வேண்டும். அவற்றையும் விரைந்து வழங்கி, போக்குவரத்து தனியாா்மயமாகிவிடாமல் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது. இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கினார். தற்போது மகளிருக்கு இலவச கட்டணம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த தொகையையும் சேர்த்து நடப்பாண்டுக்கு ரூ.2,200 கோடி வழங்க இருக்கிறார்.

தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் ஒரு நடத்துனர், டிரைவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது முதல்வர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான் இவ்வாறு அவர் பேசினார்.

 Minister Sivasankar says that Tamilnadu is the only state which have more buses

விழாவில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், ந. தியாகராஜன், செ. ஸ்டாலின் குமாா், ப. அப்துல் சமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+