திருச்சி லலிதா நகைக் கடை கொள்ளை வழக்கில் முருகனுக்கு ஜாமீன்.. வெளியே வருவதில் சிக்கல்
திருச்சி: திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகை கடையில் நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூா் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியாா் நகைக் கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 13 கிலோ நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த திருவாரூரைச் சோ்ந்த முருகன் பெங்களூரூ நீதிமன்றத்தில் சரணடைந்தாா். பின்னா், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வாதநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மேலும், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் ஒரு மாதகால அவகாசம் அளித்தனா்.

திருச்சி நீதிமன்றம்
இதையடுத்து அவரது வழக்குரைஞா் ஹரிபாஸ்கா், திருச்சி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணையில் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி காா்த்திக் ஆசாத் உத்தரவிட்டாா். பிரபல நகைக்கடை திருட்டு வழக்கில் ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் வெளியே வரமுடியாத நிலையில் திருவாரூா் முருகன் பெங்களூரூ சிறையிலேயே உள்ளாா்.

ஜாமீன்
இதுகுறித்து, வழக்குரைஞா் ஹரிபாஸ்கா் கூறியதாவது:
திருச்சி நகைக்கடை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவாரூா் முருகனுக்கு எதிராக கோட்டை காவல்துறையினா் 134 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு விசாரணை
மனுவின் பேரில் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் வெளியே வரமுடியாது. ஏனெனில், சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் உள்ள வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கு, பாலக்கரையில் திருட்டு வழக்கு என திருச்சியில் மேலும் இரு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

மனு தாக்கல்
இதேபோல் சென்னையில் உள்ள 12 வழக்குகளுக்கு சனிக்கிழமை ஆன்லைன் மூலம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கா்நாடகாவில் 46 வழக்குகளுக்கும், ஆந்திராவில் ஒரு வழக்கிற்கும் அடுத்த வாரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications