திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்!

போலீஸ்காரருக்கு ரூ.10 லட்சம் லஞ்சமும், காரும் முருகன் தந்துள்ளான்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theif Murugan story Revealed

    திருச்சி: அவன் பணம் குடுத்தானாம்.. அதை போலீஸ்காரர் ஒருத்தர் வாங்கினாராம்.. கார் குடுத்தானாம்.. அதையும் இவர் வாங்கி இருக்கார்! கொள்ளை அடித்த முருகன், விஷயத்தை கமுக்கமாக மறைக்க தமிழக போலீஸ்காரருக்கு லஞ்சமாக பணம், கார் தந்த விஷயத்தை கேட்டு முதலில் அலறி உள்ளது நம் போலீஸ் தரப்புதான்!

    கொள்ளையர்கள் 8 பேர் இருந்தாலும், அவர்களில் முருகன், சுரேஷிடம் கிடுக்கிப்பிடு விசாரணை நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    திருவாரூர் திருடன் என்பதுதான் பெயர் ஆகிவிட்டது. ஆனால், முருகன் கொள்ளையடித்து வரும்போதெல்லாம் திருவாரூர் போலீசார் சிலருக்கு பணம், நகைகளை வழங்கி, அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளான். இதனால்தான் அவன் மேல் திருவாரூரில் எந்த வழக்குகளும் இல்லையாம்.

    விடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்!விடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்!

    2 மனைவிகள்

    2 மனைவிகள்

    திருவாரூரில் எஸ்பியாக இருந்தாராம் ஒருத்தர்.. அவர்தான் முருகனுக்கு ரொம்பவும் குளோஸ்.. அவருக்கு மட்டும் ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி தந்துள்ளதும் இப்போது விசாரணையில் வெளிவந்துள்ளது. அந்த எஸ்பிக்கு 2 மனைவியாம். அவங்க 2 பேரும் என்ன டிசைன்களில் நகைகளை கேட்டிகிறார்களோ, முருகன் உடனே கொண்டு போய் தந்துவிடுவானாம்.

    ஓவற்றில் ஓட்டை

    ஓவற்றில் ஓட்டை

    இதில் என்ன ஒரு டெக்னிக் என்றால், பொதுவாக வங்கிகளுக்கு நிறைய சமயம் தொடர் விடுமுறை வரும். அப்படி லீவு நாள் எப்போ வரும்னு காத்திருந்து, தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் லீவு உள்ளது போல் நாட்களை தேர்வு செய்து அந்த நேரங்களில்தான் பேங்க் சுவத்தில் ஓட்டை போடுவானாம் முருகன்!

    தனி தனி வீடு

    தனி தனி வீடு

    எந்த மாநிலத்தில், எந்த ஊரில், எந்த இடத்தில், கொள்ளை நடத்த போகிறானோ, அந்த இடத்தில் ஒரு வீடு பிடித்துவிடுவான் முருகன். சென்னை அண்ணாநகர், நொளம்பூர், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 வீடுகளில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்து இருந்தான். இப்படி வீடுகளில் மட்டும் நடந்த கொள்ளைகளில் பலரை போலீசார் கைது செய்தாலும், முருகன் மட்டும் சிக்கவில்லை என்கிறார்கள்.

    அண்ணாநகர்

    அண்ணாநகர்

    இப்படித்தான் 2017-ம் ஆண்டில் அண்ணாநகர் பகுதியில் ஒரு கொள்ளை நடந்தது.அதில் ஈடுபட்ட 6 கொள்ளையர்கள் ஆனார்கள். ஆனால் முருகன் மட்டும் எஸ்கேப். இதற்காக, சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

    என்ன வேணும் சார்?

    என்ன வேணும் சார்?

    அந்த அதிகாரியிடம் போனில் பேரம் பேசி உள்ளான். "ஏன் சார்.. எல்லாரும் என்னை விட்டுட்டு, வேற வேற கேஸுக்கு போய்ட்டாங்க. நீங்க மட்டும் ஏன் என்னை புடிச்சே ஆகணும்னு வெறியா இருக்கீங்க? உங்களுக்கு என்னதான் சார் பிரச்சனை? என்ன வேணும்னு சொல்லுங்க.. நான் அதை பண்ணி தரேன்.." என்று டீல் பேசி உள்ளான்.

    10 லட்சம்

    10 லட்சம்

    இதற்கு பிறகுதான்,சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த ரூ.5 கோடி நகை, ரூ.19 லட்சத்தில் அந்த போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளான். ஆனால் அந்த போலீஸ்காரருக்கு பண வெறி அடங்கவில்லை.. திரும்ப திரும்ப பணம் கேட்டு முருகனை தொந்தரவு செய்யவும், இன்னொரு ரூ.20 லட்சத்தை ஒரு ஓட்டலின் முன்பு காரில் வைத்து தந்தானாம்.

    காக்கிகள் கலக்கம்

    காக்கிகள் கலக்கம்

    இது அங்கிருக்கும் சிசிடிவி காமிராவிலும் பதிவாகி இருக்கிறதாம். இதெல்லாம் முருகன் சொன்ன வாக்குமூலம்தான்.. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை இனிமேல்தான் போலீசார் விசாரிக்க வேண்டும். இதைதவிர, 2 ஹெட் கான்ஸ்டபிளுக்கு நிறைய உதவிகள் முருகன் செய்தானாம். அதனால், போலீஸ்காரர்களையும் முருகன் சிக்க வைத்து வருவதால், சம்பந்தப்பட்ட காக்கிகளுக்கு கலக்கம் வந்துள்ளது.

    English summary
    gang leader murugan said to trichy police, that he paid rs 10 lakh bribe to chennai police officer including a luxury car
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X