திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் கைதிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்றும் விசாரணை!
திருச்சி : திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 2-வது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி மத்திய சிறையில், போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், வழக்கு முடிந்த பின்னரும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் உண்ணாவிரதம், மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் கையை பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் அண்மையில் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று சுமார் 13 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கைதிகளிடமிருந்து செல்ஃபோன் மற்றும் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இன்று காலை சுமார் 9-மணி அளவில் சென்னையில் இருந்து வருகை தந்த அமலாக்க துறை அதிகாரி அஜய்கவுர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், பண பரிவர்த்தனை, நகைகள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றை குறித்து விசாரணை மேற்கொண்டனர். கைதிகளிடம் நேற்று நடைபெற்ற விசாரணையின் தொடர் விசாரணை இது என காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications