"பாலியல் தொல்லை!" திருச்சி பெரியார் கல்லூரி மாணவியின்.. புகார் உறுதியான பிறகும் நடவடிக்கை இல்லை
திருச்சி: தந்தை பெரியார் அரசு கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள விவகாரம் இப்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
Recommended Video
திருச்சியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இங்கு ஆங்கிலத் துறையில் முதுகலை பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் மீது நேரடியாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாலியல் புகார் அளித்து இருந்தார்.

பெரியார் கல்லூரி
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகவும், ஆங்கிலத் துறை துணைத் தலைவராகவும் பணியாற்றி வரும் 54 வயதான பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பாலியல் புகார்
சில ஆண்டுகளாகவே அவர் மீது புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பேராசிரியர் தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கையில் இருந்து தப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஜூன் மாதம் கல்லூரியில் ஆங்கிலம் முதுகலை படிக்கும் மாணவி ஒருவர், அந்த பேராசிரியர் மீது பாலியல் புகாரைக் கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு
இருப்பினும் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி முதல்வரின் தனிப்பிரிவு, கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருக்கு நேரடியாகப் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கக் கல்லூரி நிர்வாகத்திற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.

குற்றச்சாட்டு உறுதி
அதன்படி ஜூலை 23இல் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இதையடுத்து முழுமையான அறிக்கை கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை அனுப்பி சுமார் ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முதல்வர் கருத்து
இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் சுகந்தி கூறுகையில், "புகார் கிடைத்ததும் முறையாக விசாரணை நடத்தினோம். அதில் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இது தொடர்பாக ஆக.3இல் அறிக்கை அனுப்பிவிட்டோம். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் விரைந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அந்த பேராசிரியர் தனது அரசியல் செல்வாக்கைக் கொண்டு நடவடிக்கையைத் தடுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications