இந்தியா கூட்டணி உடையும்னு பகல் கனவு காணாதீங்க.. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது - செல்வப்பெருந்தகை
திருச்சி: இந்தியா கூட்டணி உடையும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். கொள்ளையடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி பாஜக. இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வந்திருந்தார். புத்தூர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி திறந்துவைத்த சிவாஜி கணேசன் சிலைக்கு செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது: "திருச்சியில் சிவாஜி சிலையைத் திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது.
ஆனால், இந்த நிதியாண்டில் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள். தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்த திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கூறினார். இருந்த போதும் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினோம். பா.ஜ.க தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது.
தமிழ்நாட்டு அரசு மீதும், அமைச்சர்கள் மீதும், தமிழக அரசு துறைகள் மீதும் தொடர் தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கேடு.
மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம். எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக மத்திய அரசு?.
பாஜகவிற்கும், அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகின்றன. கலவர பூமி ஆக்குவதுதான் அவருடைய நோக்கமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களை கொண்ட கட்சி. ஆனால் பா.ஜ.க. தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி. தேசத்தை கொள்ளையடிக்க வந்த திருடர்கள்தான் பாஜகவினர்.
பெரியார் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவர். ஆனால் ஜாதி அடையாளத்தோடு யு.பி.எஸ்.சி. தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் பா.ஜ.க வின் திட்டத்தின் வெளிப்பாடே.
வேண்டுமென்றே மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் அஜெண்டா. அதைதான் அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.
இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது எக்கு கோட்டை போல் உறுதியான கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். பெண்களுக்கு எதிரான கட்சிதான் பாஜக. அவர்கள் பிற்போக்குவாதிகள்" என்று கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications