கால் கலரை பாருங்க.. செருப்பை பாருங்க.. இவனுக வட நாடு கிடையாது.. நம்மாளுங்கதான்.. செம துப்பு!
அணிந்திருந்த செருப்பு வைத்தே கொள்ளையனை போலீசார் பிடித்துள்ளனர்
Recommended Video
திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் வட மாநிலத்தவர் இல்லை.. தமிழ்நாட்டுக்காரர்கள்தான் என்பது, நம்ம ஆளுங்க செருப்பு, கால் கலர்.. வைத்தே போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கிலோ கணக்கில் கொள்ளை போனதுமே தமிழகத்துக்கு இது பெரிய ஷாக் சம்பவமாக போயிற்று. திருச்சி கமிஷனர் அமல்ராஜ் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.
சிசிடிவி காமிராவில் 2 பேர் நடமாட்டம் இருந்தாலும் பெரிய நெட் ஒர்க் என்றுதான் தெரிந்தது. மேலும் சுவரில் போட்ட ஓட்டையை வைத்து பார்த்தால், நீண்ட நாள் இந்த கொள்ளைக்கு பிளான் செய்திருக்க வேண்டும் என்று தெரிந்தது.

கறுப்பு-சிவப்பு பை
சுவரில் ஓட்டை போட்ட சைஸை பார்த்தால், வடமாநில கைதேர்ந்த கொள்ளையர்கள்தான் இப்படி துளையிடுவார்கள் என்றும் சந்தேகம் எழுந்தது. இதைத்தவிர, சிசிடிவியில் உள்ள நபர்கள் குத்தவைத்துதான் நகைகளை அள்ளி பைக்குள் போட்டபடி இருந்தனர். அதனால் இவர்கள் வடமாநில கொள்ளையர்களாகவே இருக்கக்கூடும் என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது.

செருப்பு
ஆனால், கொள்ளையர்கள் போட்டிருந்த செருப்புதான் அவர்கள் நம்ம ஊர்க்காரர்கள் என்று அடையாளம் காட்டியது. மேலும் அவர்களின் கால்நிறமும் வடமாநிலத்தவர் போல இல்லை என்பது தெளிவானது. அதுவரை, வடமாநில கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டிய நிலையில், திருச்சி மாநகர காவல்துறையின் க்ரைம் பிரிவு இதனை வேறு மாதிரியாக யோசித்தது.

முருகன்
வடமாநிலத்தவர்களை மட்டுமே குறிவைக்காமல், நம்ம ஆளுங்களையும் சேர்த்து தேடுவது என்று முடிவெடுத்தனர். இதன்பிறகுதான் தமிழ்நாட்டுக்கார்களின் செல்போன் டவர், போன் டீடெயில்ஸ் என அக்கு வேறு, ஆணி வேறாக அலச தொடங்க ஆரம்பித்தனர். இறுதியில் செல்வோன் சிக்னல் காட்டியபடியே.. தனிப்படை பிரிந்து சோதனை நடத்தி, திருவாரூர் அருகே மணிகண்டன் என்ற கொள்ளைக்காரன் பிடிபடும் படலம் ஆரம்பமானது. இப்போது கேங் லீடர் முருகன் வரை போலீசாரின் பெரிய வலை வீசப்பட்டுள்ளது.

சபாஷ் போலீஸ்
இந்த வழக்கில் ஒரு க்ளூவும் கிடைக்காமல், வடமாநில கொள்ளையர்களே என்ற சந்தேகம் வலுத்த நிலையில், அணிந்திருந்த செருப்பு, கால்களின் நிறம்... இவைகளை வைத்தே தமிழ்நாட்டு கொள்ளைக்காரர்கள்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ததுடன், 48 மணி நேரத்தில், 2 பேரை கைது செய்துள்ள.. நம் போலீசாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications