திருச்சி சிவா மருமகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு! அமைச்சர் மீது கைகாட்டும் கராத்தே முத்துக்குமார்!
திருச்சி: திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் மீது காவல்துறையினர் 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததன் பின்னணியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார் திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார்.

திருச்சி திமுகவை பொறுத்தவரை அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திருச்சி சிவா எம்.பி.க்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். இன்று நேற்றல்ல கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
அந்தப் பனிப்போர் அவர்கள் இருவரது ஆதரவாளர்களால் இப்போது மேலும் முற்றி தெருவுக்கு வந்துவிட்டது. அண்மையில் திருச்சி சிவா எம்.பி. வீட்டில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் ஓய்வதற்குள் கட்சித் தலைமைக்கு புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிவாவின் மகள் பெயரில் உள்ள ஆவின் கடையில் நிறுத்தப்பட்டிருந்த டூவிலரை அடையாளம் தெரியாத நபர் திருடிச்சென்றதாகவும் அந்த நபரை பொதுமக்களுடன் சேர்ந்து விரட்டிப்பிடித்த திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் நையப்புடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் காயமடைந்த அந்த திருடனுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் எம்.பி.யான திருச்சி சிவா மருமகன் மீது காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் 7 வழக்குகள் பதிவு செய்திருப்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது.
இது குறித்து செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார், அமைச்சர் கே.என்.நேருவுக்கு தெரியாமல் போலீஸார் தன் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பேயில்லை என்றும், அமைச்சர் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications