திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. ஒருத்தனையும் விட கூடாது.. மொத்தமா பிடிக்கணும்.. தீவிர வேட்டையில் போலீஸ்

திருச்சி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள் | Robbers strike at Lalitha Jewellery in Trichy

    திருச்சி: திருச்சியை உலுக்கிய லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை தமிழகத்தையே பதற வைத்துள்ளது. ஒட்டுமொத்த திருச்சி காவல்துறையும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதால் நகரமே பரபரப்பாக உள்ளது.

    லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் தரைத் தளத்தில் உள்ள ஒரு ஷோகேஸை கூட திருடர்கள் விடவில்லை. மொத்தமாக காலி செய்து விட்டனர். வட இந்தியாவில் நடைபெறும் திருட்டு போல இது இருப்பதால் வட இந்தியக் கொள்ளையர்கள்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் நடந்த கொள்ளை போலவே இதுவும் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

    லெட்ஜர் பாதி.. ருத்ரா மீதி.. லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள்.. பழைய டெக்னிக் வைத்து ஷாக்லெட்ஜர் பாதி.. ருத்ரா மீதி.. லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள்.. பழைய டெக்னிக் வைத்து ஷாக்

    சூறை

    சூறை

    திருச்சியை உலுக்கி எடுத்துள்ளது லலிதா ஜுவல்லரி கடையில் நடந்த துணிகர கொள்ளை. மொத்த கடையையேயும் சூறையாடி விட்டனர் கொள்ளையர்கள். குழந்தைகள் போடும் மாஸ்க்கை போட்டபடி வந்து கொள்ளையடித்து சிசிடிவி கேமராவையும் கலாய்த்துள்ளனர். இந்தக் கொள்ளை தொடர்பாக போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    வேட்டை

    வேட்டை

    திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தனிப்படைகளை அமைத்து தானே முன்நின்று விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். கடையை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டுள்ளனர். மொத்த திருச்சி காவல்துறையும் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரமாக களம் இறக்கி விடப்பட்டுள்ளது.

    சோதனை

    சோதனை

    திருச்சி புறநகர் எஸ்பியும் களத்தில் குதித்துள்ளார். திருச்சி நகரை விட்டு வெளியேறிய சந்தேகத்திற்குரிய வாகனங்களை கண்டுபிடிக்க டோல்கேட் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கடை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் தீவிரமாக ஆராயப்படுகின்றன.

    ஹோட்டல்கள்

    ஹோட்டல்கள்

    திருடர்கள் ஏதாவது துப்பை விட்டுச் சென்றுள்ளனரா என்றும் தீவிரமாக ஆராயப்படுகிறது. நேற்று இரவும், இன்று காலையும் ஹோட்டல்களை காலி செய்தவர்கள் லிஸ்ட்டும் எடுக்கப்படுகிறது. அவர்கள் யார் என்ற விவரமும் சேகரிக்கப்படுகிறது. லலிதா ஜுவல்லரி கடை பகுதியில் சந்தேகப்படும்படியான வாகன நடமாட்டம் குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

    சந்தேகம்

    சந்தேகம்

    லலிதா ஜுவல்லரி கடைக்கு சமீப காலத்தில் வந்தவர்கள் குறித்த சிசிடிவி பதிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. அதில் யாரேனும் கடையை நோட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு உள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த திருச்சி காவல்துறையும் இந்த கொள்ளை சம்பவத்தை பெரும் சவாலாக எடுத்து அதி தீவிரமாக புலனாய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    English summary
    Police are actively investigating the robbery at the Lalitha Jewellery Store. This has caused tension in Trichy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X