தமிழக பயணிகளுக்கு குட் நியூஸ்.. முக்கிய ரூட்களில் ரயில்வே செய்யும் தரமான சம்பவம்.. மேட்டர் இதுதான்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கவாச்' கருவியை அனைத்து ரயில் பாதைகளிலும் பொருத்தும் பணியை ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, நெல்லை - திருச்சி ரயில் பாதைகளில் கவாச் கருவியை பொருத்த ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். சாலை போக்குவரத்தை விட ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது என்பதால் வசதி படைத்தவர்கள் கூட ரயிலில் செல்வதையே அதிகம் விரும்புகிறார்கள். ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு அப்டேட்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Southern Railway introduces Kavach to enhance safety of the Rail passengers

கவாச் கருவி: அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கவாச் என்ற தொழில் நுட்பத்தை ரயிலில் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தது. கவாச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும். இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.

ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கவாச்' கருவியாகும். ரயில்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க இந்த தொழில்நுட்பத்தை பொருத்துவதில் ரயில்வே நிர்வாகம் வேகம் காட்ட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நெல்லை - திருச்சி வரை: இந்த நிலையில் தான், தெற்கு ரயில்வேயில் ரயில் விபத்தை தடுக்க நெல்லை முதல் திருச்சி வரையிலான ரயில்பாதையில் நவீன கருவி அமைக்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மதுரை கோட்டத்தில் திருச்சி முதல் நெல்லை வரை உள்ள ரயில் நிலையங்களில் விபத்தை தடுப்பதற்காக 'கவச்' கருவி பொருத்தப்பட்டுள்ளதாம்.

ஒலி எழுப்பும்: இந்தக் கருவி எப்படி செயல்படும் என்றால் ரெட் சிக்னல் இருக்கும் போது அதை ரயில் கடந்து செல்லாமல் தடுக்கும் திறன் கொண்டது. அதேபோல, அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறாமல் ரயிலை செல்ல வைக்கும். லெவல் கிராசிங் வருகிறது என்றால் தாமாகவே ஒலி எழுப்பும். கவாச் பொருத்தப்பட்ட இரண்டு ரயிலின் என்ஜின்கள் மோதுவதை தடுக்கும். இந்த கருவியை பொருத்தவரை இரு வகையாக அமைக்கப்படும்.

ஒன்று ரயில் நிலையங்ளிலும் பொருத்தப்படும். மற்றொன்று ரயில் இன்ஜினில் பொருத்தப்படும். ரயில் நிலையங்களில் பொருத்தப்படும் கருவிகள் ரயில்கள் பாதுகாப்பான வேகத்தில் செல்கிறதா என்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்கும். இந்த கருவி தற்போது தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தில் மட்டும் 316.65 கிமீ துாரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

25 வழித்தடத்தில்: சென்னை - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கடற்கரை, எழும்பூர் - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - விழுப்புரம், திருச்சி - விழுப்புரம், திருச்சி - திண்டுக்கல், மதுரை - விருதுநகர், விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி, வாஞ்சி மணியாச்சி - நெல்லை, நெல்லை - நாகர்கோவில் உள்ளிட்ட 25 வழித்தடத்தில் இந்த 'கவாச்' தொழில்நுட்பம் படிப்படியாக செயல்படுத்தப்பட இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடத்தில் கவாச் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேவேளையில் இது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+