Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த நண்பர்கள்.. திருச்சியில் ஒரு கலகல நிகழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: என்னதான் சொல்லுங்கள்.. கல்லூரியில் படித்த காலமும், பள்ளியில் கிடைத்த பாடங்களும் அத்தனை சீக்கிரம் நமது மனதை விட்டு விலகி விடுவதில்லை. திருச்சியைச் சேர்ந்த மாணவர்கள் 20 வருடம் கழித்து ஒன்றாக கூடி தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்துள்ளனர்.

Trichy seshayee institute of technology (SIT) கல்லூரியில் 2003ம் ஆண்டு சிவில் படிப்பை முடித்த மாணவ, மாணவியர்தான் இந்த கலகலப்புக்கு சொந்தக்காரர்கள்.

அங்கு படித்த மாணவ மாணவியர் 20 வருடங்கள் கழித்து தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். அந்த வகுப்பில் படித்த அனைவரும் இன்று கட்டிட பொறியியல் துறையில் துபாய், சவுதி, மஸ்கட், குவைத், ஆஸ்திரேலியா போன்ற அயல் நாடுகளிலும் , இந்தியாவின் பிற பகுதிகளிலும், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களிலும் சிலர் தனியாக காண்டிராக்டர்கள் ஆகவும் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறைகளிலும் அதிகாரிகள் ஆக உள்ளனர்..

2 நாள் கொண்டாட்டம்

2 நாள் கொண்டாட்டம்

இவர்களுக்கு இருக்கும் வேலை பளுவிற்கு இடையில் இந்த நிகழ்ச்சிக்காக 2 நாள்,விடுமுறை எடுத்து கொண்டு வந்து கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் தங்கள் கணவர் மற்றும் பிள்ளைகள் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பெண் தோழிகள் நட்பு படிக்கும் போதே முடிந்து விடும் என்ற விதியை மாற்றி நாங்கள் இன்றும் எங்கள் நட்பை தொடர்கிறோம் என்கின்றனர்.

நட்பு

நட்பு

சில பெண்களுக்கு தங்களுடன் படித்த தோழிகள் பெயர் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டால் தெரியாது மறந்து விட்டேன் என்று சொல்லும் பெண்களுக்கு மத்தியில் இவர்கள் இன்றும் தங்கள் நட்பை கொண்டாடுகின்றனர். ஆண் நண்பர்களோ இன்றும் ஒரு குடும்பமாக தங்கள் நட்பை மனைவி குழந்தைகள் உடன் குடும்பமாக சுற்றுலா ,விருந்து என கொண்டாடுகின்றனர்.

முடியாதவர்களுக்கு உதவி

முடியாதவர்களுக்கு உதவி

இன்னும் ஒரு படி சென்று ராயல் civil 03 charitable trust ஒன்றை அமைத்து ஆதரவற்ற குழந்தைகள் படிப்பு, நன்றாக படிக்கும் எழை மாணவர்களின் உயர் கல்வி, வயதான ஆதரவற்ற வயதான முதியவர்களின் மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்கின்றார்கள். திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் முதியவர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் இவர்கள் தொடர்பு கொள்ளலாம்...

சந்திப்பு 2020

சந்திப்பு 2020

நண்பர்களின் சந்திப்பு 2020ல் நடந்ததால், 20 விதமான மரக்கன்றுகள் நட்டு அருமையான ஒரு செயலையும் செய்துள்ளனர். சந்திப்பு என்றால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இல்லாமலா.. கேக் வெட்டியும், மிஸ்டர் அன்ட் மிஸஸ் வினாடி வினா, பாசிங் பால், ஒரு தீக்குச்சியில் மெழுகுவர்த்தியை பற்ற வைக்கும் போட்டி என விதம் விதமாக நடத்தி அசத்தினர். பரிசுகளும் கொடுக்கப்பட்டது.

2025ல் மீண்டும்

2025ல் மீண்டும்

2 நாள் விழா கொண்டாட்டம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை என்ற அளவுக்கு அத்தனை அற்புதமாக இருந்தது. அடுத்து இதே தேதியில், 202ம் ஆண்டு மீண்டும் ஒன்று கூடி இதேபோல கொண்டாடவும், முடிந்தவரை மற்றவர்களுக்கு மேலும் பல உதவிகள் செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுத்து மனசெல்லாம் நிறைவுடன்.. அனைவரும் பிரியா விடை பெற்றுச் சென்றனர்.

- திவ்யா தங்கவேல்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+