நடுக்காட்டுப்பட்டியில் மழை சிறிது நேரத்தில் நின்றுவிடும்.. மீட்பு பணிகள் பாதிக்காது.. வெதர்மேன்
சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டியில் பெய்து வரும் லேசான மழை இன்னும் சிறிது நேரத்தில் நின்றுவிடும். எனவே மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படாது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இவர் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இவரை மீட்க கடந்த 3 நாட்களாக தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஊர் மக்கள், போலீஸார், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் போராடி வருகின்றனர்.

வானம் மேகமூட்டம்
இங்கு நேற்று மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. குழிக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்து வருகிறது.

மழை
இதனால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சிறிய அளவிலான மேகக் கூட்டங்கள் வானத்தில் பரவி காணப்படுகின்றன. இதனால் மழை பெய்து வருகிறது.

மேக கூட்டங்கள்
இன்னும் சில மணி நேரங்களில் இந்த மழை நின்றுவிடும். எனவே மீட்பு பணிகளில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். எனினும் திருச்சியின் வடமேற்கு பகுதியில் மேகக் கூட்டங்கள் திரண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழி தோண்ட திட்டம்
தற்போதைய நிலவரப்படி ரிக் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறையை குடைந்து போர் போடும் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications