அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. திருச்சியில் சோகம்
திருச்சி: திருச்சி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் நவலூர்கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தனது தாய் மற்றும் மகனுடன் வயலுக்கு உரமிட சென்றார்.

உயிருக்கு போராட்டம்
அப்போது அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை ராமமூர்த்தி மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார் ராமமூர்த்தி.

மூன்று பேரும் பலி
இதனை பார்த்த அவரது தாய் ஒப்பாயியும் மகன் குணசேகரனும் ராமமூர்த்தியை காப்பாற்ற முயன்றனர். இதில் மூன்று பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

பெரும் சோகம்
ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று மூன்று பேரும் பலியாயினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனிவாசன்..
இதனிடைய திருச்சி
கீழபுலிவார்டு ரோடு அண்ணா நகரை அடுத்த வேதாத்திரி நகரை சேர்ந்த தந்தை மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். திருச்சி
கீழபுலிவார்டு ரோடு அண்ணா நகரை அடுத்த வேதாத்திரி நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.

தச்சுத் தொழிலாளிகள்
62 வயதான சீனிவாசனின் 33 வயது மகன் செந்தில். செந்திலுக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சீனிவாசன் மற்றும் செந்தில் இருவரும் இன்று அதிகாலை தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

உடல்களை மீட்டு
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த
கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 பேர் பலி
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இன்று மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications