"பொண்டாட்டி ஐ லவ் யூடி செல்லம்" புது மனைவிக்கு ஸ்டேட்டஸ் வைத்த கணவரை.. அள்ளிய திருச்சி போலீஸ்.. ஏன்
திருச்சி: 3 பெண்களை திருமணம் செய்து, ஏராளமான பெண்களை ஏமாற்றியதாக சொல்லப்படும் தினேஷ் என்ற இளைஞரை பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், தினேஷ் எப்படி போலீசில் சிக்கினார்? என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ரெங்களாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். 24 வயதான தினேஷ், பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது.

முதல் மனைவியை பிரிந்தார்
ஆனால், தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவியை பிரிந்த தினேஷ், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்.. அப்போதுதான், வள்ளி என்ற பெண்ணுடன் தினேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டு, முதல் மனைவிக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்துள்ளார்.. இப்போது வள்ளிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, சென்னையிலிருந்து பெரம்பலூர் வந்த தினேஷ் மினி பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.. அப்போது பஸ்ஸில் பயணம் செய்த ரம்யா என்ற மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.. பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இந்த ரம்யா.. முதுகலை மைக்ரோ பயலாஜி (MSC) பயின்ற ரம்யாவை, தினேஷ் காதலித்து அவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. அதாவது 2 வாரங்களுக்கு முன்புதான் இந்த திருமணம் நடந்துள்ளது.
புது மனைவி மீதான மோகம்
புது மனைவி ரம்யா மீதுள்ள காதல் மோகத்தால், தான் திருமணம் செய்து கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து My pondatti I Love you dee Chellam... மை பொண்டாட்டி ஐ லவ் யூடி செல்லம் என்று பதிவிட்டுள்ளார் தினேஷ்.. இதை பார்த்து டென்ஷனான முதல் மனைவியான சௌந்தர்யா, தினேஷை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார்.. அத்துடன், போலீசுக்கு போவதாகவும் கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு பயந்துபோன தினேஷ், செல்போன் தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.
இதனால், செளந்தர்யா, தினேஷின் 3வது மனைவியான ரம்யாவை தேடிச்சென்றுள்ளார்.. அப்போதுதான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதை கூறி, தினேஷ் இருக்குமிடத்தை கேட்டறிந்துள்ளார்.
இதற்கு பிறகே பெரம்பலூர் மகளிர் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்.. அந்த புகாரில், "என்னை திருமணம் செய்து, 3 வயதில் குழந்தை உள்ளபோது, கணவர் தினேஷ் என்னை ஏமாற்றிவிட்டு வேறு 2 பெண்களை திருமணம் செய்துள்ளார்.. மேலும் என்னிடம் விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவித்தார்.
அடம் பிடித்த பட்டதாரி பெண்
இந்த புகாரின் பேரில் தினேஷை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்ட பெரம்பலூர் மகளிர் போலீஸார், கொலை மிரட்டல் விடுதல் (351 - (2) ), ஏமாற்றுதல் 318. சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்தல் 82, ஆபாசமாக திட்டுதல் 296, மற்றும் தாக்குதல் செய்தல் 115, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்துள்ளனர்.
இந்த 3 பேரையும் தினேஷ் திருமணம் செய்து ஏமாற்றியதுடன், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியிருக்கிறாராம். எனவே, தினேஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருப்பதாக தெரிகிறது. அவரிடம் தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..
இதில் சென்னையில் தினேஷ் திருமணம் செய்த வள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம்.. ஆனாலும், தினேஷை மறுமணம் செய்துள்ளார்.. அதேபோல, தினேஷின் 3வது மனைவியான பட்டதாரி பெண்ணான ரம்யா, தினேஷுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என்று சொல்லியும் கேட்கவில்லையாம். தினேஷோடுதான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தாராம். இதனால், அவரது பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications