விருப்ப ஓய்வு கேட்ட டிஎஸ்பி.. உள்துறை செயலருக்கு கடிதம்.. போலீஸ் வட்டாரத்தில் வெடித்த அடுத்த சர்ச்சை
திருச்சி: விருப்பு ஓய்வு அளிக்குமாறு உள்துறைச் செயலருக்கு திருச்சி டிஎஸ்பி கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். உதவி ஆய்வாளராக 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது டிஎஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தொடர்ச்சியாக தான் பணி செய்ய முடியாததால் தனக்கு விருப்ப ஓய்வு வேண்டும் என உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் டிஎஸ்பி பரத் ஸ்ரீனிவாஸ். இந்த கடிதம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்பட்ட ரீதியான மன உளைச்சலா அல்லது பணிச்சுமையா என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் தனக்கு உயரதிகாரிகளால் பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications