திருச்சி, மதுரையே குலுங்குது..ஏர்போர்ட்டிலிருந்து டென்ஷனா ஓடியது யார் பாருங்க.. கரெக்ட்டா வந்தாச்சு
திருச்சி: சென்னையை தொடர்ந்து, மதுரை, திருச்சி ஏர்போர்ட்களில் அதிரடி சோதனையை அதிகாரிகள் நடத்தி உள்ளனர்.. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள். அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்..

ஏர்போர்ட்கள்: இது தமிழகம் முழுவதுமுள்ள ஏர்போர்ட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.. கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வரும்நிலையில், 2 நாட்களுக்கு முன்புகூட, சென்னை ஏர்போர்ட்டில் 113-க்கும் மேற்பட்டோர் தங்கத்தை கடத்தி வந்ததற்காக பிடிபட்டார்கள்.
நேற்று ஒரே நாளில், மதுரை ஏர்போர்ட், திருச்சி ஏர்போர்ட்டிலும் பலர் சிக்கி உள்ளனர்.. மதுரை ஏர்போர்ட் 7-ம் நம்பரில் உள்ள பாத்ரூமுக்குள் ஒரு சின்ன பார்சல் இருந்துள்ளது.. இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறையினர், அதைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
பாத்ரூமுக்குள் பார்சல்: இதன் மதிப்பு ரூ.1.20 கோடி என்கிறார்கள்.. துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில், இந்த தங்கக்கட்டிகளை பயணிகள் கடத்தி வந்திருக்கலாம் என்றும், அதிகாரிகளின் கெடுபிடியால் கடைசி நேரத்தில் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக, பாத்ரூமுக்குள் பார்சலை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.. எனினும், இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.
அதேபோல, சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று திருச்சி வந்து சேர்ந்தது.. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்... அப்போது, சுங்கத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வரும் குமார் என்பவர், ஏர்போர்ட்டை விட்டு வேக வேகமாக வெளியேறினார்.. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை அழைத்து விசாரணை நடத்தினர். பிறகு சோதனையும் செய்தனர். அப்போது, அவரிடம் 1 கிலோ தங்கம் இருந்தது.
அறந்தாங்கி நடராஜன்: இந்த தங்கத்தைதான் அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றார்.. ஆனால் வசமாக சிக்கிவிட்டார். அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் என்ற பயணி கடத்தி வந்த தங்கத்தை, டிரைவர் குமார் ஏர்போர்ட்டிலிருந்து உயர் அதிகாரிகள் வரும் பாதை வழியாக வெளியே கொண்டுவர உதவி செய்தது தெரியவந்தது.

வழக்கமாக சுங்கத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை அதிகாரிகள் எப்போதுமே சோதனை செய்வதில்லை.. அதனால்தான், குமார் இந்த காரியத்தில் துணிந்து இறங்கியது தெரியவந்தது. குமார் கொடுத்த தகவலின் பேரில் தங்கத்தை பெறுவதற்காக விமான நிலைய வாகன நிறுத்தத்தில் காத்திருந்த புதுக்கோட்டையை சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
கேள்வி: அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை குமார் பலமுறை வெளியே கொண்டு வந்து கொடுத்ததாக தெரியவந்தது.
சுங்கத்துறையின் உயர் அதிகாரிகள் மட்டுமே செல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை டிரைவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது? அப்படியானால், சுங்கத்துறை அதிகாரிகள் யாரேனும் தங்கம் கடத்தலுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். டிரைவர் குமார், டேனியல் மைக்கேல், நடராஜன் ஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்து, 56 லட்ச மதிப்புள்ள அந்த நகையையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
-
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications