திருச்சி ஸ்பா விபச்சாரம்.. பெண் மேனேஜர் சொன்ன விஷயம்.. தலைமறைவான விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது
திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில் மசாஜ் சென்டரில் (ஸ்பா) விபச்சார தொழில் செய்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் மசாஜ் சென்டரில் (ஸ்பா) பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அடுத்து திருச்சி விபச்சார தடுப்புப் பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு கடந்த 10 நாட்கள் முன்பு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் லட்சுமி தேவி என்பவர் மேலாளராக இருந்து விபச்சாரம் செய்துவந்தது தெரியவந்தது. அவரது ஏற்பாட்டில் அங்கு இரண்டு பெண்களும் இருந்தனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெறுவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்பா மேலாளர் லட்சுமி தேவியைக் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட லட்சுமி தேவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ள செந்தில்குமார் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என கூறினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்,
இதனிடையே மாணவர்களுக்கு உதவி தொகை மற்றும் பரிசு உள்பட பல நல்ல விஷயங்களை நடிகர் விஜய் செய்து வரும் நிலையில், அவரது இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகி இப்படி ஒரு தொழில் செய்தது, விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவாக இருந்த திருச்சி 'ஷைன் ஸ்பா' உரிமையாளரான செந்தில்குமார் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தனது ஸ்பாவில் சோதனை நடத்திய போதே தலைமறைவாகிவிட்டதால், அவரை பிடிக்க தீவிரமாக போலீசார் முயற்சித்து வந்தனர்.
இந்நிலையில் தீவிரமாக தேடிவந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில்குமாரை கைது செய்தனர். அவரது விடுதியில் 3 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். செந்தில்குமாரை போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள். அதில் பல தகவல்கள் வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications