Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''கைத்தட்டலும், வாழ்க கோஷமும் இல்லாமல் நாம் ஒருநாளும் வாழ்ந்ததில்லை''.. திமுக எம்.எல்.ஏ. சொன்ன கதை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவருமன இனிகோ இருதயராஜ் வாரம் ஒரு நாளாவது குட்டி கதை சொல்லிவிடுகிறார். அந்தக் கதையில் நீதி போதனைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் ''கைத்தட்டலும், வாழ்க கோஷமும் இல்லாமல் நாம் ஒருநாளும் வாழ்ந்ததில்லை'' என 2 சீனியர் அரசியல்வாதிகள் பேசிக்கொள்வது போன்ற கதையை இந்த வாரம் சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

We have never lived a day without clapping and cheering slogans Dmk mla Inigo Irudayaraj told story

''வேலாயுதமும், ரகோத்தமனும் 90 வயதை கடந்த முதியவர்கள். அரசியல்வாதிகளாக இன்னும் கூட இருந்து மக்கள் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் வேலாயுதம் கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டார். பாவம்,அது தான் சாக்கென்று அவர் படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் வேலாயுதத்தின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போய்விட்டது.

வேலாயுதம் இறக்கப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்ததும், ரகோத்தமன் தினமும் அவரைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவார். ஒரு நாள் ரகோத்தமன், வேலாயுதத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டு கூறுகிறார், "நாம் இருவரும் வாழ்நாள் முழுவதும் அரசியல்வாதிகளாகவே இருந்து விட்டோம். கைத்தட்டலும், வாழ்க கோஷமும் இல்லாமல் நாம் ஒருநாளும் வாழ்ந்ததில்லை. தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.

நீங்கள் இறந்தப்பிறகு சொர்க்கத்திற்கு சென்றதும் , இங்கே இருப்பதைப் போன்ற பதவிகளும், சொகுசான வாழ்க்கையும் அங்கே இருக்கிறதா என்பதை எப்படியாவது எனக்கு தெரியப்படுத்துங்கள். அப்படி தேர்தல் இருந்தால் நான் இங்கு இருந்தே என்னை தயார் செய்து கொண்டு அங்கு வந்து விடுகிறேன்" என்றார். வேலாயுதம் மரணப் படுக்கையில் இருந்த படியே தனது நண்பன் ரகோத்தமனை கனிவுடன் பார்த்து, "ரகோ..நீ என் நீண்ட கால நண்பன். என்னால் முடியுமென்றால் நிச்சயமாக உனக்கு இந்த உதவியைச் செய்வேன்"என்று கூறி விட்டு இறந்து விடுகிறார்.

தன் உயிர் நண்பனின் இழப்பால் ரகோத்தமன் மிகவும் நொடிந்து போய்விட்டார். சதா காலமும் வேலாயுதத்தின் நினைப்பு அவரை வாட்டிக்கொண்டே இருந்தது.இதனால் ரகோத்தமன் உடல் நல குறைவுக்கு ஆளானார். ஒரு நாள் நள்ளிரவு இருக்கும். "ரகோ.. ரகோ.. என்று மெல்லிய குரலில் யாரோ அழைப்பது போன்ற உணர்வு ஏற்பட , ரகோத்தமன் திடீரென விழித்துக் கொண்டார். எழுந்து உட்கார்ந்து ரகோத்தமன் கேட்கிறார். "யார் அது?" "ரகோ..பயப்படாதே..... ஏன் இப்படி உனக்கு வியர்த்து கொட்டுகிறது? நான் தான் உனது நண்பன் வேலாயுதம்."

அந்த அரைத் தூக்கத்திலும் "வேலாயுதமா? வேலாயுதம் செத்து ஆறு மாதம் ஆகிறது. என்னிடம் பொய் பேசுகிறாயா? "ரகோ..நான் ஏன் உன்னிடம் பொய் பேச வேண்டும்? நான் தான் வேலாயுதம் வந்திருக்கிறேன் என்றது அந்த குரல். ரகோத்தமனுக்கு முழு தூக்கமும் போய்விட்டது. நடுக்கத்தோடே,"நண்பா சொர்க்கத்தில் இருந்தா பேசுகிறாய்? என்று கேட்டார். "ஆமாம் என் உயிர்த்தோழனே!சொர்கத்திலிருந்து உனக்கு இரண்டு தகவல்களை கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று சந்தோஷமான தகவல். மற்றொன்று துக்ககரமான தகவல்" என்கிறது அந்த அமானுஷ்ய குரல்.

"முதலில் நல்ல செய்தியைச் சொல்லுங்கள்" என்கிறார் ரகோத்தமன். " இங்கே இருப்பது போன்ற ஜனநாயகம் தான் சொர்க்கத்திலும் இருக்கிறது. அங்கும் தேர்தல் நடக்கிறது. அங்கேயும் பல துறைகள் இருக்கிறது. ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். நல்ல விதமாக அவைகளை செயல்படுத்தவும் செய்கிறார்கள். நமக்கு முன்பாக இறந்து போன நமது பழைய நண்பர்கள் எல்லாம் கவுன்சிலர்களாகவும், காண்ட்ராக்டர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். இதைவிட சிறப்பான ஒரு கூடுதல் செய்தி என்ன தெரியுமா? சொர்க்கத்தில் யாருக்கும் வயதாவதே இல்லை. அனைவரும் இளமையாகவே இருக்கிறார்கள்" என்றது அந்த அமானுஷ்ய குரல்.

தொடர்ந்து சொன்னது அந்த அமானுஷ்ய குரல், "தேர்தல் கமிஷன் கெடுபிடிகள் சொர்க்கத்தில் கிடையாது. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அவர் சொர்க்கத்தில் இருந்தாலும் சரிஅல்லது பூலோகத்தில் இருந்தாலும் சரி!"பூலோகத்தில் இருந்தால் கூடவா?என ஆச்சரியமாக கேட்டார் ரகோத்தமன். "பூலோகத்தில் இருப்பவர்களுக்காக சொர்க்கத்தில் இருப்பவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து அவர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து பூலோகத்தில் இருப்பவர்களை வெற்றி பெற கூட வைக்க முடியும்! என்றது அந்த அமானுஷ்ய குரல்

"ஓ.. அற்புதம்! என்று துள்ளி குதித்தார் ரகோத்தமன்.ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு, "அப்படியானால்,அந்த துக்க செய்தி என்ன?"
என்று ஆர்வமுடன் கேட்டார் ரகோத்தமன். அதற்கு "சொர்க்கத்தில் உன் பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்து, உன்னை நான் வெற்றி பெற வைத்து விட்டேன். நாளை, உனக்கு சொர்க்கத்தில் பதவி ஏற்பு விழா" என்று சொல்லி மறைந்தது அந்த அமானுஷ்ய குரல்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+