விடிகாலை நேரம்.. கிணற்றடிக்கு ஓடிய மைதிலி.. உள்ளே எட்டி பார்த்து டார்ச் அடித்து அதிர்ந்த மக்கள்!
கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து விட்டார் இளம்பெண்
திருச்சி: விடிகாலை நேரத்தில், குழந்தையை தூக்கி கொண்டு கிணற்றடிக்கு ஓடினார் மைதிலி.. உள்ளே டார்ச் லைட் அடித்து எட்டி பார்த்தபோதுதான் பொதுமக்கள் அதிர்ந்தனர்!
திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்.. மனைவி பெயர் மைதிலி.. 30 வயதாகிறது.. 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சந்தோஷ்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார்.. வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்... இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் மைதிலிக்கு போன் செய்து பேசியுள்ளார்... போனிலேயே இருவருக்கும் சண்டை வந்துள்ளது... சந்தோஷ்குமாரை திட்டிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார் மைதிலி!
ஆனால் இரவெல்லாம் அழுதுகொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் விடிகாலை குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு பின்பக்கம் உள்ள கிணற்றடிக்கு ஓடினார்.. அப்படியே குழந்தையுடன் உள்ளே குதித்துவிட்டார்.
கிணற்றுக்குள் இருந்து மைதிலியும், குழந்தையும் அலறினர்.. விடிகாலை நேரம் என்பதால், அந்த சத்தம் தெளிவாக கேட்டது.. அதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் டார்ச் அடித்து பார்த்தனர்... அப்போதுதான் தாயும் - சேயும் தண்ணீரில் தத்ளித்து கொண்டிருப்பது தெரிந்தது.. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, 9 வீரர்கள் விரைந்து வந்துவிட்டனர்.
இவர்களுக்கு இஆர்டி எனப்படும் ஸ்பெஷல் டீம் என்று பெயராம்.. ஒரு வீரர் இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு, கடகடவென கிணற்றுக்குள் இறங்கிவிட்டார்.. அந்த கிணறு 35 அடி ஆழம் உடையது.. ஆனால் மைதிலியும் குழந்தையும் 5 அடி ஆழ நீரில் இருந்தனர்.. அதனால் அப்படியே கயிறு கட்டி மேலே கொண்டுவந்துவிட்டார்.
வீரர்கள் வரும்போதே தயாராக 108 ஆம்புலன்ஸையும் அழைத்து வந்திருந்ததால், அதிலேயே இருவருக்கும் தீவிர சிகிச்சை தரப்பட்டது.. இப்போது தாயும், சேயும் சவுக்கியம்.. எந்த நேரமாக இருந்தாலும், விழிப்புடனேயே இருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கயிறு கட்டி இரு உயிர்களை காப்பாற்றி வீரர்களை மக்கள் பாராட்டி தள்ளினர்.. ஆனால் குழந்தையுடன் கிணற்றில் குதித்த மைதிலியிடம் விசாரணை நடக்கிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications