"யாரும் இப்படி பண்ணாதீங்க" R15 பைக்கில் வித்தை காட்டிய திருச்சி இளைஞர்.. பாடம் புகட்டிய காவல்துறை!
திருச்சி: சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் வித்தை காட்டிய இளைஞர்கள் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர், இனி பைக்கில் பயணிக்கும் போது இதுபோன்ற வித்தைகளில் ஈடுபட மாட்டேன் என்றும், ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் பைக் ஓட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் பலரும் ரீல்ஸ் மற்றும் புகைப்படம் மோகத்தில் பல்வேறு பைக் சாகசங்களை சாலையிலேயே செய்து வந்தனர். அதிலும் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் இப்படியான செயல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் ட்ரெண்டான நிலையில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை கைவிட்டு வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. 4 நாட்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் இந்த சாலையில் தனது யமஹா ஆர்15 பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டார்.
அதிலும் பைக்கின் பின் இருக்கையின் நுனியில் அமர்ந்து கைகளால் ஹேண்டில் பாரினை பிடிக்காமல் சென்றார். இது அவருக்கு மட்டுமல்லாமல் அருகில் செல்வோருக்கும் ஆபத்தை விளைவிப்பதை போல் அமைந்தது. இதனை வீடியோவாக எடுத்து சில சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ ட்ரெண்டான போது, சமூக ஆர்வலர்கள் பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வாகனம் யாருடையது, அந்த இளைஞர் யார் என்று காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில் பொது இடத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவரை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், என் பெயர் பாலகிருஷ்ணன்.
பிப்.27ஆம் தேதியன்று பல்வேறு பணிகளுக்காக என் வண்டியை எடுத்து சென்ற போது, கைகளை விட்டு பைக்கை ஓட்டியது சோசியல் மீடியாவில் பெரிய செய்தியாக பரவிவிட்டது. இதன்பின் சமயபுரம் காவல்துறையினர் என்னை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ஓட்டுவேன், இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இளைஞரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
-
திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications