தூத்துக்குடியில் கள்ள ஓட்டு முயற்சி.. தேர்தலை புறக்கணித்த கிராமத்தில் நுழைந்த கும்பல்! சிக்கிய 4 பேர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தலை புறக்கணித்த கிராமத்தில் நுழைந்து கள்ள ஓட்டு போட முயன்ற 4 பேரை கிராம மக்கள் பிடித்தனர். மேலும் அவர்களை அழைத்து சென்ற போலீசாரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை லோக்சபா தேர்தல் நடந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில பூத்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் என சிறு இடையூறுகள் ஏற்பட்டன.

இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்தனர். அதாவது பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆலைகளால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த ஆலைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. தமிழக மீனவ துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிராமத்துக்கு வந்த நிலையில் அவரையும் மக்கள் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து கிராம மக்கள் அந்த கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் அமர்ந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் திடீரென இன்று பிற்பகல் கிராமத்துக்குள் கார் ஒன்று சென்றுள்ளது. அவர்கள் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. அதாவது கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் அவர்களின் ஓட்டுகளை இந்த கும்பல் கள்ள ஓட்டாக பதிவு செய்ய முயன்றுள்ளது.
இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். 4 பேர் சிக்கினர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் நால்வரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். இந்த வேளையில் அவர்களின் கார் உள்ளிட்டவற்றை சரியாக சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பொதுமக்கள் போலீஸ் வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு கள்ள ஓட்டு போட வந்த கும்பலின் காரில் சோதனையிட்டனர். அப்போது மதுபான பாட்டில்கள், கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்டவை இருந்தது. இதனால் அவர்கள் 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த வேளையில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு போலீசார் அவர்கள் 4 பேரையும் அழைத்து சென்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications