Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 சவரன் தங்கம்.. கடலில் மூழ்கி தேடி கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் & கடல் பாதுகாப்பு படையினர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் நீராடும்போது பெண் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சேர்ந்து கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின் முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி மற்றும் உடன்பிறந்த தங்கையான வாசுகி ஆகியோர் குடும்பத்துடன் வந்துள்ளனர்.

Tuticorin Tiruchendur Sea

அவர்கள் அனைவரும், திருச்செந்தூர் கடலில் புனித நீராடி உள்ளனர். அப்போது வாசுகி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போனது. இதனால் அதிர்ந்து போன வாசுகி உடனடியாக தன்னோடு வந்திருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே கார்த்திக் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

காவலர்கள் உடனடியாக கடல் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர் சிவராஜா தலைமையிலான குழுவினர், கடலில் தொலைந்து போன தங்க சங்கலியை சல்லடை போட்டுத் தேடினர்.

அப்போது கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் கையில் தங்கச் சங்கிலி சிக்கியது. தங்கச் சங்கிலியை, கடல் பாதுகாப்பு பணியாளர் உடனடியாக வேலுச்சாமி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் வாசுகியின் தங்க சங்கிலியை அவரது சகோதரி ஜோதியிடம் காட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த வாசுகியின் தங்க சங்கலி இதுதானா என்று உறுதிப்படுத்திய பின்பு வாசுகியியம் ஒப்படைத்தனர்.

5 சவரன் தங்கச் சங்கிலி, கடலில் நீராடியபோது காணாமல் போனதால், தவித்த நிலையில், கடல் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் சேர்ந்து தேடி, தனது செயினை மீட்டுக் கொடுத்ததால் வாசுகி அவர்களுக்கு நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். திருச்செந்தூர் கடலில் நீராட வந்த பக்தர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 5 சவரன் தங்கச் செயினின் இன்றைய மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும் நிலையில், கடலில் தொலைந்து மீட்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+