எப்போதும் இல்லாத வகையில்.. இந்த வருஷம்தான் ரொம்ப அவதி.. பொங்கல் பரிசு வாங்க வந்த மக்கள் குமுறல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொங்கல் பரிசு வாங்க 6 மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்யப்பட்டுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்தனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 16 ஆயிரத்து 40 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 28 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக் கடை உள்ளது. இதில் 4500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என் அறிவிக்கப்பட்டது.

நியாய விலைக் கடை
இதைத் தொடர்ந்து இன்று போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க காலை 8 மணி முதல் ஆண்கள், பெண்கள் என திரண்டனர். ஆனால், மதியம் 1.30 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் ஆன்லைனில் ஏற்ற தாதமதம் ஏற்பட்டது.

6 மணி நேர காத்திருப்பு
இதனால் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க வந்தவர்கள் சுமார் 6 மணி நேர காத்திருப்பிற்கு பின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சார்ந்த உஷா ராணி என்ற பெண்மணி கூறுகையில், உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த 6 மணி நேரமாக பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்க காத்திருந்தேன்.

வயதானவர்கள்
வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். முதலில் தாமத்திற்கு நெட்டில் வேஷ்டி சேலை ஏறவில்லை என முதலில் சொன்னார்கள். பின்னர் சென்னையில் முதல்வர் வழங்கிய பின்பு வழங்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்தது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications