காதலிப்பதாக தொந்தரவு.. தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வடமாநிலத் தொழிலாளி கைது!
தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி கடத்திய புகாரில் வடமாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த அலிமுதீன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். இவர் மங்கட்டாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை முனாப் அலியம் கூலித் தொழில் செய்து வருகிறார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
உள்ளூரில் போதிய வேலை இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து வேலை செய்து வருகிறார்கள். அதேற்கேற்றாற்போல் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இங்குள்ள ஓட்டல்கள், கட்டிட காண்டிராக்டர்கள் என அனைவரும் அவர்களை இங்கேயை தங்கவைத்து 3 வேளை உணவும் கொடுத்து வேலை தருகிறார்கள்.

திருட்டு செயலில் ஈடுபடும் கூட்டம்
ஆனால் அந்தக் கூட்டத்தில் இருக்கும் சிலர் குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதிக்கலாம் என்று நினைத்து சென்னையில் திருடுவது, செயின்பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்கின்றனர். இந்நிலையில், கோவில்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்த அலிமுதீன் அங்கே வசிக்கும் 17 வயது சிறுமியை அவ்வப்போது பின்தொடர்ந்துள்ளார். விலகி விலகிப் போனாலும் அந்த சிறுயிடம் சென்று காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

காதல்
ஆனாலும் சிறுமி சம்மதிக்காமல் இருந்ததால் ஏதேதோ பேசி அந்த சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தன் தாயிடம் தெரிவிக்க, அவர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர் நாககுமாரி சிறுமியிடம் தீவிர விசாரணை செய்தனர்.

தாய் புகாரில் கைது
இதன் பின்னர் புகாரில் முகாந்திரம் இருப்பதை உணர்ந்து அலிமுதீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆட்கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட புகாரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. பின்னர் அலிமுதீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications