அஜிதா செய்த காரியம் தெரியுமா.. தவெக வெளியில் சொல்லாத உண்மை..தூத்துக்குடி நிர்வாகி சாமுவேல்ராஜ் பகீர்
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. திமுக, அதிமுகவை போல தவெகவிலும் கோஷ்டி அரசியல் முற்றி கொண்டிருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா தனக்கு பதவி வழங்காத அதிருப்தியில் விஜய் காரை மறித்து, பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காமல், சாமுவேல் ராஜ் என்பவரை தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளராக விஜய் நியமித்துள்ளார். இதுகுறித்து சாமுவேல் ராஜ், அஜிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாடு அரசியலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தல் என்றாலே உள்கட்சி பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும்.

தவெக விதிவிலக்கில்லை
திமுக மற்றும் அதிமுக மாதிரியான ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடங்கி தவெக வரை விதிவிலக்கில்லை. சென்னை பனையூரில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா அக்னஸ் என்ற தவெக பெண் நிர்வாகி பதவி கிடைக்காத அதிருப்தியில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் சென்ற காரை இன்று மதியம் மறித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அவருக்கு இறங்கி பதில் சொல்லாமல் சென்றார். தவெக நிர்வாகிகள், பாதுகாவலர்கள் அஜிதா மற்றும் அவரின் ஆதரவாளர்களை விலக்கி வைத்தனர். இதுதொடர்பாக தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நாங்க பெரிய கட்சி
நாங்கள் திமுகவை விட பெரிய கட்சி. திமுகவை விட அதிக நிர்வாகிகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். பதவிபோடும் போது நிர்வாகிகளிடையே வருத்தம் ஏற்படுவது இயல்பு தான். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வளிக்கப்படும் என்று நிர்மல் விளக்கமும் அளித்திருந்தார். தொடர்ந்து அஜிதா பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தவெகவில் கட்சி ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிர்வாகியாக இந்நிலையில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 8 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் அறிவிப்பு
அந்த வகையில் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர்களான சாமுவேல் ராஜ் என்பவரை நியமித்து விஜய் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொகுதி வாரியாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒட்டபிடாரம் தொகுதிக்கு மதன் ராஜ், கோவில்பட்டி தொகுதிக்கு பாலா, விளாத்திக்குளம் தொகுதிக்கு மகேஸ்வரன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் பதவி கேட்டு அஜிதா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த பதவி சாமுவேலுக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு அஜிதா மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி காரை மறிப்பாங்களா
இதுகுறித்து சாமுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தளபதியும், பொதுச் செயலாளரும் என் வேலையை பார்த்து பொறுப்பு வழங்கியுள்ளனர். நான் தளபதிக்கும், பொதுச்செயலாளருக்கும் விசுவாசமாக இருந்தேன். அவர் கட்சிக்கு எதிராக சென்றுவிட்டார். தளபதி காரை மறித்தது பெரிய குற்றம். இதை அவர் செய்திருக்க கூடாது. கட்சியில் இருந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடாது.
அவசர பதவியில்லை
எல்லோருமே ஒருங்கிணைந்துதான் செயல்பட்டோம். அவர் மட்டும் தனியாக எதுவும் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் அவருக்கு கட்சி நிறைய வாய்ப்புகளை வழங்கியது. ஒவ்வொருமுறையும் அவர் கட்சியை அசிங்கப்படுத்தி சென்றார். இது வெளியில் யாருக்கும் தெரியவில்லை. அதை எங்கள் கட்சியும் வெளிப்படுத்தவில்லை. இது அவசரமாக நியமிக்கப்பட்ட பதவி இல்லை.
கடந்த 6 மாதங்களாக சென்னை வந்து சென்று கொண்டிருந்தோம். அஜிதாவால் தான் பதவி நியமனம் செய்ய தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கு கோஷ்டி அரசியல் எல்லாம் நடக்காது. எல்லோரும் ஒருங்கிணைந்துதான் பணியாற்றுவோம்." என்றார்.
-
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications