வெறும் 28 வயது தான்.. தூத்துக்குடி அருகே நடுரோட்டில் சுருண்டு விழுந்த காவலர்.. கர்ப்பிணி மனைவி கதறல்
தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் குலசேகரக்கோட்டை பகுதியை சேர்ந்த பசுபதி மாரி என்ற ஆயுதப்படை காவலர், கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்ட போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மருத்துவமனை வாசலில் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது..
தென்காசி மாவட்டம் குலசேகரக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவருடைய மகன் பசுபதி மாரி (வயது 28). பசுபதி மாரி கடந்த 2017-ம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த பசுபதி மாரிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் மாரிச்செல்வி.. இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது மாரிச்செல்வி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த ஆகஸ்ட 5-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் துப்பாக்கி சுடுதல் தளத்தில் கமாண்டோ பயிற்சி நடந்தது. அப்போது சக காவலர்களுடன் காவலர் பசுபதி மாரியும் வந்தார். அங்கு துப்பாக்கி சுடுதல் தளத்தில் கமாண்டோ பயிற்சியுடன் பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டப்பயிற்சியிலும் காவலர் பசுமதி மாரி ஈடுபட்டார். அப்படி ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்ட போது, கீழவல்லநாடு குடிநீர் தொட்டி அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதை கண்டு அவருடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆயுதப்படை காவலர் பசுமதி மாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பசுபதி மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த காவலர் பசுபதி மாரியின் உடலை பார்த்து அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது..
உடற்பயிற்சி செய்யும் போது, உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. ஜிம்மில் அல்லது உடற்பயிற்சி கூடங்களில், கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் நீர் சத்து குறைந்து மயங்கி விழுவது, மாரடைப்பு ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது. மிக இளம் வயதில் உள்ளவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications