திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெளியே திடீர் குலவை.. அமைச்சர் ரோஜா.. அதிர்ந்த பிரஸ் மீட்
தூத்துக்குடி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனான சந்திப்பு எதற்கு என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு குலவையிட்டு கிண்டல் செய்த ஆந்திர அமைச்சர் ரோஜா கடைசி வரை அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமலே புறப்பட்டுச் சென்றார்.
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2024 ஆந்திர சட்டசபைத் தேர்தலில் 175க்கு 175 தொகுதிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தான் கைப்பற்றும் என மிக உறுதியாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தங்கள் கட்சி தான் என்றும் தெலுங்கு தேசம் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது எனவும் கூறினார்.
அப்போது ரஜினிகாந்த் குறித்த விமர்சனம், நேற்று நடைபெற்ற டிடிவி தினகரனுடனான சந்திப்பு என்பன உட்பட இன்னும் பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை வீசினர்.

இதென்னடா வம்பா போச்சு என்கிற வகையில், ஆந்திராவில் இருந்த போது ரஜினி மீது அனல் கக்கிய ரோஜா, நேற்றைய தினம் தமிழகத்தில் ரஜினிகாந்த் பற்றி வாய் திறக்க தயங்கினார்.
சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு நகர்ந்த ரோஜாவை செய்தியாளர்கள் விடுவதாக இல்லாமல், டிடிவி தினகரனை மதுரையில் திடீரென சந்தித்தது ஏன் வினவினர்.
அப்போது ''லுலலுலலுல'' என குலவையிட்டு கிண்டல் அடித்த ஆந்திர அமைச்சர் ரோஜா பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications