ஐ லவ் யூ தலைவா.. காவி நிற ஹார்ட்டின்.. பச்சை நிற அவுட்லைன்.. சிறுவன் சர்பிரைஸ்.. அண்ணாமலை ஸ்டன்
தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது நடைப்பயணத்தின் போது ஐ லவ் யூ தலைவா என சிறுவன் எழுதிவைத்திருந்த சார்ட் பேப்பரை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் ஊழலுக்கு எதிராக என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். கடந்த மாதம் 28ஆம் தேதி தனது பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார்.

ராமநாதபுரத்தில் தொடங்கிய பாதயாத்திரையில் அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் செய்தார். பிறகு சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருமயம் வழியாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி காரைக்குடி சென்றார். பிறகு மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை முடிக்கிறார். தூத்துக்குடியில் அவர் 3 நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்தார். பழைய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் அருகில் மாநகராட்சி அலுவலகம் முன்பு இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து குருஸ் பர்ணாந்து சிலை, சத்திரம் தெரு ரதவீதிகள் மற்றும் அந்தோணியார் கோவில் வழியாக சண்முகபுரம் சென்று சுமங்கலி திருமண மண்டபம், கன்னி விநாயகர் கோவில் சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் முன்பு அண்ணாமலை பேசினார். அவருக்கு அந்த மாவட்ட பாஜகவினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இந்த நிலையில் அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவின் சாதனைகளை விளக்கியும் திமுக மீதான விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூர் சென்ற அண்ணாமலைக்கு ஒரு சிறுவனின் அன்பு நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டது. அந்த கூட்டத்தில் சிறுவன் ஒருவர் அண்ணாமலையை பார்ப்பதற்காக காத்திருந்தார்.
கையில் சார்ட் பேப்பரில் ஐ லவ் யூ தலைவா என எழுதியிருந்தான். அதில் காவி நிறத்தில் ஹார்ட்டினும் சுற்றி பச்சை நிறத்தில் அவுட்லைனும் கொடுத்திருந்தான். உடனே அண்ணாமலை அந்த சிறுவனை அழைத்து நலம் விசாரித்தார். பின்னர் அதே சார்ட் பேப்பரில் அண்ணாமலை கையெழுத்திட்டு சிறுவனின் தந்தையிடம் அந்த சிறுவன் குறித்து கேட்டறிந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அது போல் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பாஜக மீது விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் பாதயாத்திரையின் போது அண்ணாமலைக்கு வழங்கப்படும் திருக்குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்களை தொட்டு கும்பிட்டு கண்களில் ஒத்திக் கொண்டு பயபக்தியுடன் பெற்றுக் கொள்கிறார்.

-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications