வேல் யாத்திரை நடத்தியபோது வேல் தூக்கினாரே ஸ்டாலின்.. ஏன் இப்போ வாழ்த்து சொல்லல?- எல்.முருகன் கேள்வி!
தூத்துக்குடி : நாங்கள் வேல் யாத்திரை நடத்தியபோது பயந்து வேலை தூக்கிய முதல்வர் ஸ்டாலின், இப்போது வாழ்த்து சொல்ல மறுப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
எட்டு வழி சாலை திட்டத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கண்மூடித்தனமாக தீவிரமாக எதிர்த்தார்கள் என்பது ஆதாரத்துடன் இருகின்றது. இன்று திமுக அதை ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான நெற்கட்டும் செவலில் மரியாதை செலுத்துவதற்காக இன்று காலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி விமானநிலையம் வருகை தந்தார்.

முதல்வருக்கு மனமில்லை
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், "விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டடு கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற இந்திய மக்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தமிழக முதலமைச்சர் சில பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். சில பண்டிகைகளுக்கு அவர் நேரடியாக போய் அவர்களுடன் கொண்டாடுகிறார். விநாயகர் சதுர்த்தி பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகை, ஆனால் அதற்கு வாழ்த்து சொல்ல அவருக்கு மனமில்லை.

வேல் தூக்கினார்
அது திமுகவின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இப்போது அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். மாநில மக்களின் தலைவர். மக்களுடைய பிரதிநிதியாக இருப்பவர், ஒரு பெரும்பான்மையான மக்கள் கொண்டாடக்கூடிய விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை. நாங்கள் வேல் யாத்திரை நடத்தியபோது பயந்து வேலை தூக்கியவர் இப்போது மறுப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

8 வழிச்சாலையில் திமுக
எட்டு வழி சாலை திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்மூடித்தனமாக எதிர்த்தது திமுக என்பது அத்தனை பேருக்குமே தெரியும். ஆதாரமும் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகள் வளர வேண்டும்.

மோடி தலைமையில்
2047ல் நாட்டின் கட்டமைப்பு உயர்த்தப்படவேண்டும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி உழைத்து கொண்டிருக்கிறார். மத்திய அரசு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளிலும் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா நேரத்தில் மற்ற நாடுகள் இன்று கூட கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் பிரதமர் எடுத்த சரியான முடிவின்படி, மாஸ்க் இல்லாமல் தைரியமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொரோனா கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கின்ற பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஜெயிலருக்கு பாதுகாப்பில்லை, போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பில்லை. சென்னையில் நகை அணிந்து தனியாக போக முடியவில்லை. முதியவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா பரந்து விரிந்து கிடக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications