பாருங்க கொடுமையை.. ராத்திரி நேரத்தில் பறந்த தண்ணீர் சொம்பு, குழம்பு வாளி.. ஹோட்டல் வீடியோ பரபரப்பு
கோவில்பட்டி ஓட்டலில் நடந்த தகராறின் வீடியோ வைரலாகிறது
தூத்துக்குடி: ஹோட்டலில் சிரித்ததற்காக இரு தரப்பினரிடையே எழுந்த மோதல் கைகலப்பில் முடிந்துள்ளது.. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க் எதிரே தனலெட்சுமி என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது... சாலையோரம் உள்ளதால் பெருமளவில் இங்கு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இங்கு நேற்றிரவு வீரவாஞ்சி நகரை சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கரநாரயணன் ஆகியோர் சாப்பிட வந்தனர்..

ஊழியர்
அதே போல் கிருஷ்ணா நகரை சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.. இதில், அருண்குமாரும், அவரது நண்பர்களும் வழக்கமாக இங்கு வந்து சாப்பிடுவதுதான் வழக்கம்.. அதனால் ஹோட்டலில் வேலை பார்ப்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அப்படித்தான் நேற்று சாப்பிடும்போது, வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியருடன் சிரித்து பேசியுள்ளனர்...

சிரிப்பு
அருண்குமார் சிரித்து பேசுவதை, அருகில் உட்கார்ந்திருந்த பிரசாத்தும், அவரது நண்பர்களும் தங்களை பார்த்து தான் அவர்கள் சிரிப்பதாக நினைத்து, கொண்டனர்.. அத்துடன் அருண்குமாரிடம் ஏன் எங்களை பார்த்து சிரிக்கிறீங்க என்று கேட்டுள்ளனர்.. அதற்கு அருண்குமாரும் நண்பர்களும், நாங்கள் உங்களை பார்த்து சிரிக்கவில்லை என்று விளக்கம் தந்தனர்..

கைகலப்பு
ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை.. தங்களை பார்த்துதான் ஏதோ கேலி செய்து சிரிப்பதாக சொல்லி தகராறு செய்தனர்.. இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் முற்றியது.. அது கைகலப்பாக மாறியது.. பிறகு ஒருகட்டத்தில் அருண்குமாரும், நண்பர்களும், சாப்பிட்டதற்கு பில் கொடுத்து விட்டு கிளம்ப முயன்றனர்.. ஆனால், மறுபடியும் வந்து பிரசாத்தும் நண்பர்களும் வம்புக்கு இழுத்தனர்.. அதெப்படி எங்களை பார்த்து சிரிக்கலாம் என்று சொல்லி தகராறில் ஈடுபட்டனர்..

தகராறு
இதனால், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.. அந்த ஹோட்டலில் இருந்த சேர், தண்ணீர் செம்பு, குழம்பு வாளி எல்லாவற்றையும் எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர்.. கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலே போர்களம் போல காட்சியளித்தது. இது குறித்து ஹோட்டல் ஓனர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவும், போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

விசாரணை
இரு தரப்பினருமே ஒருவர் மீது ஒருவர் புகார்களை தந்தனர்.. அந்த புகார்களை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. அத்துடன் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானதை வைத்து ஆய்வு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்... அந்த சண்டை காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications