திருச்செந்தூர் ரகசியம் தெரியுமா.. விஜய் மட்டுமல்ல பல அரசியல் தலைவர்கள் ஓடிவருவதன் பின்னணி
தூத்துக்குடி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று திருச்செந்தூர் வருகை தந்து முருகனை தரிசனம் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த சத்ருசம்கார மூர்த்தியை தரிசனம் செய்தார். சத்ரு சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தால் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள் என்பது வரலாறு. அந்த தரிசனம் தான் விஜய் மட்டுமின்றி பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைள், தொழில் அதிபர்கள் திருச்செந்தூர் வரவழைக்க காரணமாக பார்க்கப்படுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது. தற்போதைய விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எண்ணற்ற பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். தேர்தல் பரபரப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் பலரும் திருச்செந்தூரை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

நேற்றைய தினம் திடீரென தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகை தந்து முருகனை தரிசனம் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த சத்ருசம்கார மூர்த்தியை தரிசனம் செய்தார். சத்ரு சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தால் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள் என்பது வரலாறு.
இந்த நிலையில் இன்று அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்தனர். கோவில் திரிசுதந்திரர்கள் கோவிலுக்கு வந்த அமைச்சர்களுக்கு கும்ப மரியாதை அளித்தனர். அதைத் தொடர்ந்து இருவருக்கும் சுமார் 5 அடி உயரம் கொண்ட வேலை திரிசுதந்திரர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, மூலவரான முருகனை வழிபட்ட அவர்கள், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சண்முகர், தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளிலும் வழிபாடு செய்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் திருச்செந்தூர் முருகனை நோக்கி படையெடுத்து வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மிகவும் சக்திவாய்ந்த வழிபாடாகக் கருதப்படுவது சத்ரு சம்ஹார மூர்த்தி வழிபாடு. தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வருவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலின் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே சத்ரு சம்ஹார மூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது. "சத்ரு" என்றால் எதிரி, "சம்ஹாரம்" என்றால் அழித்தல். தன்னை நம்பி வருபவர்களின் அக மற்றும் புற எதிரிகளை அழிப்பவர் என்பதே இதன் பொருள் ஆகும்.
சத்ரு சம்ஹார மூர்த்தி முருகப் பெருமானின் ஆறு முகங்களைக் கொண்ட சண்முகர் வடிவமாகும். இவர் மயில் வாகனத்தின் மீது அமர்ந்து, கைகளில் பல்வேறு ஆயுதங்களை ஏந்திப் போர் கோலத்தில் காட்சியளிக்கிறார். சூரபத்மனை வதம் செய்யப் புறப்பட்ட அந்த ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான வடிவமே சத்ரு சம்ஹார மூர்த்தி. இந்த மூர்த்திக்குச் செய்யப்படும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மற்றும் யாகம் மிகவும் பிரபலம். இதில் முருகனின் 300 திருநாமங்கள் ஓதப்பட்டு அர்ச்சனை செய்யப்படும். இந்த வழிபாட்டின் மூலம் தீய சக்திகள், பொறாமை, கண்திருஷ்டி மற்றும் நேரடி அரசியல் அல்லது தொழில் எதிர்ப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.
முருகப் பெருமான் திருச்செந்தூரில் தான் சூரபத்மனை வதம் செய்து "ஜெயந்தி நாதர்" (வெற்றி வீரர்) என்ற பெயரைப் பெற்றார். வரலாற்றுக் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்படும் முன் இந்த மூர்த்தியை வணங்கிச் செல்வது வழக்கம் ஆகும். அந்த வகையில் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள விஜய், எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், தடைகளைத் தகர்க்கவும் இந்தச் சிறப்பு வாய்ந்த சத்ரு சம்ஹார மூர்த்தியைத் தேர்ந்தெடுத்துத் தரிசனம் செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது. திருச்செந்தூரில் சண்முகருக்கு உகந்த இந்த வழிபாட்டைச் செய்பவர்களுக்குத் துணிச்சலும், தன்னம்பிக்கையும் பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications